சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை முயற்சி: போலீஸ் நிலையம் முற்றுகை

Added : நவ 09, 2021
Share
Advertisement
மரக்காணம்:மரக்காணம் அடுத்த கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் நந்தினி, 22; இவருக்கும் கோட்டக்குப்பம் அடுத்த நடுகுப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர், 32; என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.திருமணத்தின்போது பெண் வீட்டிலிருந்து முறைப்படி சீர்வரிசை கொடுத்துள்ளனர். இந் நிலையில், தாய் வீட்டிற்கு வந்த நந்தினி கடந்த வாரம் துாக்கு போட்டுக் கொண்டு

மரக்காணம்:மரக்காணம் அடுத்த கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் நந்தினி, 22; இவருக்கும் கோட்டக்குப்பம் அடுத்த நடுகுப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர், 32; என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பெண் வீட்டிலிருந்து முறைப்படி சீர்வரிசை கொடுத்துள்ளனர். இந் நிலையில், தாய் வீட்டிற்கு வந்த நந்தினி கடந்த வாரம் துாக்கு போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அவர் புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து மேலும் 7 சவரன் நகை வாங்கித் தரும்படி நந்தினியை மாமனார் பாபு, மாமியார் அம்பிகா ஆகியோர் துன்புறுத்தியதால்தான் தற்கொலைக்கு முயன்றதாக மரக்காணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த நந்தினியின் உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X