பொது செய்தி

தமிழ்நாடு

பயிற்சி முகாம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், இல்லம் தேடி கல்வி திட்ட கருத்தாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் துவங்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர் ஸ்டெல்லா மேரி மல்லிகா, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர்

விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், இல்லம் தேடி கல்வி திட்ட கருத்தாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

பயிற்சியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் துவங்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர் ஸ்டெல்லா மேரி மல்லிகா, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் தனவேல் வரவேற்றார். சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா சிறப்புரையாற்றினார்.

இல்லம் தேடி கல்வி திட்ட மாநில ஆலோசகர் தாமோதரன், விழுப்புரம் பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். அறிவொளி இயக்க தன்னார்வலர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X