அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிவாரண பணி காங்., பாராட்டு

Added : நவ 09, 2021
Share
Advertisement
சென்னை:''மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு நிவாரண பணிகளை சிறப்பாக செய்து வருகிறது,'' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. தினேஷ் குண்டுராவ் மற்றும் முன்னணி தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்
 நிவாரண பணி காங்., பாராட்டு

சென்னை:''மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு நிவாரண பணிகளை சிறப்பாக செய்து வருகிறது,'' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. தினேஷ் குண்டுராவ் மற்றும் முன்னணி தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மழைக் காலத்தில், காங்கிரஸ் கட்சி முன்னெடுக்க வேண்டிய நிவாரணப் பணிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அழகிரி கூறுகையில், ''டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு, மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.

தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை, காங்கிரசார் வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிளை சிறப்பாக செய்து வருகிறது,'' என்றார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, தினமும் 25 ஆயிரம் நபர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X