அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமிஷன் வாங்கியதாக அவதுாறு பரப்புகின்றனர்: பழனிசாமி ஆவேசம்

Updated : நவ 11, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை:''அ.தி.மு.க., அரசு சாதனையை முடக்க, 'கமிஷன்' வாங்கியதாக அவதுாறு பரப்புகின்றனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மழை நீர் வடிகால்வாய் அமைக்க முன்னுரிமை கொடுத்தோம். ''தி.மு.க., அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.நிவாரண உதவிசென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில்,
கமிஷன் ,அவதுாறு , பழனிசாமி ஆவேசம்

சென்னை:''அ.தி.மு.க., அரசு சாதனையை முடக்க, 'கமிஷன்' வாங்கியதாக அவதுாறு பரப்புகின்றனர்.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மழை நீர் வடிகால்வாய் அமைக்க முன்னுரிமை கொடுத்தோம். ''தி.மு.க., அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.


நிவாரண உதவி

சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில், இரண்டாவது நாளாக நேற்று பழனிசாமி ஆய்வு செய்தார்; மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். பின் அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில், அதிகாரிகள் நேரடியாக சென்று பார்க்கவில்லை. அரசு விரைந்து செயல்பட்டு, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

அ.தி.மு.க., அரசு அமைந்த பின், சென்னை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தோம். தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, மழை நீர் வடிகால் வசதி செய்து கொடுப்பதற்காக, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 'ஸ்மார்ட் சிட்டி'குறிப்பாக, 1,385 கோடி ரூபாய் மதிப்பில், அடையாறு - கூவம் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் வசதி, 406 கி.மீ., துாரத்துக்கு செய்து முடிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் கன மழை பெய்தும், தண்ணீர் தேங்காமல் உள்ளது. எண்ணுார் முகத்துவாரம் முழுதும் துார் வாரப்பட்டு, தற்போது நீர் எளிதாக கடலை அடைகிறது. இதனால், வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் முடிந்துள்ளன. மாம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணி, 80 கோடி ரூபாயில் முடிந்துள்ளது. கொசஸ்தலை வடிநிலம் பகுதியில், 3,220 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த வடிகால் பணி, 769 கி.மீ., துாரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டது.

இதுவரை, 95 கி.மீ., நீளத்திற்கு, 250 கோடி ரூபாயில் பணிகள் முடிந்துள்ளன. மீதி பணிகளை, இந்த அரசு விரைவாக துவக்கி முடிக்க வேண்டும்.கோவளம் வடிநில பகுதியில் 1,714 கோடி ரூபாயில், 360 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கப்பட்டு, பசுமை தீர்ப்பாயம் தடை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.


குற்றச்சாட்டு

அ.தி.மு.க., அரசு பல பணிகளை செய்ததால், கன மழை பெய்தும் நீர் தேங்கவில்லை. முதல்வர் ஸ்டாலின், 'அ.தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படாததால் தண்ணீர் தேங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஸ்டாலின் ஐந்து ஆண்டு கள் மேயராக இருந்தார். மா.சுப்பிரமணியன் ஐந்து ஆண்டுகள் மேயராக இருந்தார். அப்போது என்ன செய்தனர்?

ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோதும், சரியாக கவனம் செலுத்தாததால், கொளத்துார் தொகுதி உட்பட, பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது; மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வட கிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன், வடிகால்களை துார் வாரி இருக்க வேண்டும். இதை அரசு செய்யாததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


முன்னுரிமை



அ.தி.மு.க., அரசு சாதனையை முடக்க, கமிஷன் வாங்கியதாக அவதுாறு பரப்புகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மழை நீர் வடிகால்வாய் அமைக்க முன்னுரிமை கொடுத்தோம். நீதிமன்றத்தில் அ.தி.மு.க., அரசு செய்துள்ள பணிகளை, தற்போதைய அரசு தெரிவித்தால் நீதிபதிகளுக்கு தெரியும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
10-நவ-202122:10:50 IST Report Abuse
T.sthivinayagam இருபது எம்எல்ஏ சீட் கொடுத்ததை விடவா பெரிய கமிஷன் இருக்குது.
Rate this:
Cancel
10-நவ-202120:29:56 IST Report Abuse
சம்பத் குமார் 1). பணிகளில் தொய்வு காணப்படுவதாவே தெரிகிறது. முழுவதாக நிறைவு பெறவில்லை.2). அல்லது சரியான திட்டமிடல் இல்லையா???3). சில விஷயங்களில் சாஃப்ட் ஆக அதிமுக வேலை செய்தது என்பதை மறந்து விட முடியாது.4). அதிமுகவிற்கு கமிஷன் எவ்வளவு கிடைத்தது மற்றும் எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது அந்த ஈசனுக்கே வெளிச்சம்.5). மொத்தத்தில் தமிழனுக்கு பட்டை நாமம்.6). மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம்.7). குற்றமற்றவருக்களுக்கு என்ன பயம்??? நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
10-நவ-202115:33:52 IST Report Abuse
J. G. Muthuraj விவேக் நம்மிடமில்லையே....இவர்களை பார்த்து நீங்கல்லாம் ரம்பா ரசிகர்களான்னு கேட்டுருப்பாரு.....ஸ்டாலின் கமிஷனைப்பார்த்தாரா என்று கேட்கிறார், எபிஎஸ்.....பிறர் கண்ணில் படும்படியாக செய்கிறதொழிலா அது?....ஆட்சியில் இருக்கும்போது இவ்வளவு புத்திக்கூர்மையா பேசினதில்லையே, செயல்பட்டதில்லையே.....திறமையின் ஊற்றுக்கண்ணாய் இருக்கிறார்களே.....ஸ்டாலின் பாடு கஷ்டந்தானா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X