அரசியல் செய்தி

தமிழ்நாடு

'துணை மின் நிலையங்கள் ஒரு மீட்டர் உயர்த்தப்படும்'

Added : நவ 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:''தாழ்வான பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் உயரம் தற்போது உள்ள நிலையில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்படும்,'' என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னையில் உள்ள பெரியார் நகர், 'பி அண்டு சி' மில் துணை மின் நிலையங்களை ஆய்வு செய்தபின், அவர் அளித்த பேட்டி: கன மழையை எதிர்கொள்ள மின் வாரியம்

சென்னை:''தாழ்வான பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் உயரம் தற்போது உள்ள நிலையில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்படும்,'' என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பெரியார் நகர், 'பி அண்டு சி' மில் துணை மின் நிலையங்களை ஆய்வு செய்தபின், அவர் அளித்த பேட்டி: கன மழையை எதிர்கொள்ள மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியதால், நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு துணை மின் நிலையமும் தற்போது செயல்பாட்டிற்கு வந்து உள்ளது.தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக, 12 ஆயிரத்து 200 மின் இணைப்புகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது. தற்போது 4,650 இணைப்புகளுக்கு மட்டுமே மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் தரைக்கு அடியில் கேபிள் வாயிலாக மின் வினியோகம் குறித்து, முந்தைய ஆட்சியில் சட்டசபையில் பல முறை அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த பணிகள் முழுமை அடையவில்லை. தற்போது, அதை நிறைவு செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் உயரம் தற்போதுள்ளதை விட, ௧ மீட்டர் உயர்த்தப்படும். இந்த பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும்.இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
10-நவ-202106:38:10 IST Report Abuse
Loganathan Kuttuva வேகமான காற்றுடன் கூடிய புயல் மழையால் மரங்கள் மின் கம்பங்கள் சாயும்.இப்பொழுது கண மழையால் மரங்கள் மின்கம்பங்கள் முறிந்து சேதம் ஏற்படவில்லை .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-நவ-202102:47:28 IST Report Abuse
Bhaskaran கொஞ்சம் சாப்பிடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X