துளிகள் செய்தி

தமிழ்நாடு

கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா

Added : நவ 09, 2021
Share
Advertisement
அன்னூர்: வடக்கலூர், கருப்பராயசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும், 15ம் தேதி நடக்கிறது.வடக்கலூரில் பழமையான கருப்பராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, புதிதாக கருவறை, விமானம், மகா மண்டபம் அமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டி, திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த, 7ம் தேதி முளைப்பாரி போடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை தீர்த்தம் எடுப்பதற்கு பக்தர்கள் செல்லும் நிகழ்ச்சியும்,

அன்னூர்: வடக்கலூர், கருப்பராயசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும், 15ம் தேதி நடக்கிறது.வடக்கலூரில் பழமையான கருப்பராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, புதிதாக கருவறை, விமானம், மகா மண்டபம் அமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டி, திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த, 7ம் தேதி முளைப்பாரி போடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை தீர்த்தம் எடுப்பதற்கு பக்தர்கள் செல்லும் நிகழ்ச்சியும், வரும், 13ம் தேதி காலையில் விநாயகர் வழிபாடும், மாலையில் திருக்குடங்களில் சக்திகளை எழுந்தருளச் செய்தலும், சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
14ம் தேதி காலை விமான கலசம் நிறுவுதலும், மாலை, இரவு வேள்வி பூஜையும் நடக்கிறது.வரும், 15ம் தேதி காலை, 9:00 மணிக்கு, விநாயகர், கருணாம்பிகை உடனமர் அவிநாசியப்பர், பாலமுருகன், நவநாயகர் மற்றும் கருப்பராயன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X