அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரியாறு உரிமையை காக்க முடியாத தி.மு.க., அரசு! அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் புகார்

Added : நவ 09, 2021
Share
Advertisement
கம்பம்:''முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியவர் ஜெயலலிதா. அந்த உரிமையை காக்க முடியாமல் 139.5 அடியாக தி.மு.க., அரசு குறைத்து விட்டது,'' என, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை நீர்மட்டம் தொடும் முன், தமிழக அதிகாரிகள் தண்ணீர் திறந்ததையும், கேரளா, தமிழக அரசை கண்டித்தும், தேனி மாவட்டம், கம்பத்தில் அ.தி.மு.க.,
 பெரியாறு உரிமையை காக்க முடியாத தி.மு.க., அரசு! அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் புகார்

கம்பம்:''முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியவர் ஜெயலலிதா. அந்த உரிமையை காக்க முடியாமல் 139.5 அடியாக தி.மு.க., அரசு குறைத்து விட்டது,'' என, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை நீர்மட்டம் தொடும் முன், தமிழக அதிகாரிகள் தண்ணீர் திறந்ததையும், கேரளா, தமிழக அரசை கண்டித்தும், தேனி மாவட்டம், கம்பத்தில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஒப்பந்தம்

இதில், பன்னீர்செல்வம் பேசியதாவது:ஜான் பென்னிக்விக், தன் நகை, சொத்துக்களை விற்று பெரியாறு அணையை கட்டினார். 999 ஆண்டுகளுக்கு, அணையின் நீரை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று வரை, அணை நம் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2000வது ஆண்டில், கேரள அரசும், அங்குள்ள சில பத்திரிகைகளும் அணை பலமாக இல்லை என வதந்தி பரப்பின. 2001 - 2006 வரை ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, கேரள அரசிடம் பேசி, அணையில் பராமரிப்பு பணி செய்து புது பொலிவாக மாற்றினார்.

அப்போது, பராமரிப்பிற்காக அணையின் நீர் மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. பராமரிப்பு முடிந்து, அணையின் நீர் மட்டத்தை மீண்டும் உயர்த்த கேரள அரசு மறுத்தது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்குஉச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். தொழில் நுட்பக் குழு ஆய்வு செய்து, அணை பலமாக உள்ளது என பரிந்துரை செய்தது. அதை ஏற்ற உச்ச நீதிமன்றம், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை பராமரிப்பு செய்த பின் 152 அடியாக உயர்த்தலாம் என்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது.


கெட்ட நேரம்



கடந்த 2006ல் கெட்ட நேரம் ஆரம்பமானது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 2006 - 2011 வரை தி.மு.க., ஆட்சியில் எதையும் செய்யவில்லை. கடந்த 2011ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். 2013ல் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம். இப்போது தி.மு.க. அரசு, 139.5 அடியாக குறைத்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து உள்ளது.

நீர்மட்டம் 142 அடியாக உயரும் முன், தண்ணீரை திறந்து விட்டது ஏன்; அதற்கு உத்தரவிட்டது யார்? அணையின் பாதுகாப்பு, இயக்குதல், பராமரிப்பு என அனைத்தும் நம்மிடம் உள்ளது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நமக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், 139.5 அடியாக இருக்கும் போதே ஏன் தண்ணீரை திறந்து விட்டீர்கள்? தென் மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

நாம் பெற்றுத் தந்த உரிமையை காப்பதும் நம் கடமையாகும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவில்லை என்றால், தென் மாவட்ட மக்களை திரட்டி, போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X