இடியின்போது ஹலோ சொன்னால் டமார்! அறிவுரை வழங்கிய தீயணைப்பு துறையினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடியின்போது 'ஹலோ' சொன்னால் 'டமார்'! அறிவுரை வழங்கிய தீயணைப்பு துறையினர்

Added : நவ 09, 2021
Share
பெ.நா.பாளையம்: இடி, மின்னல் ஏற்படும் போது, மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது. வீட்டில், 'டிவி' இணைப்பை துண்டிக்க வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவனுார் மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகள், தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில்,



பெ.நா.பாளையம்: இடி, மின்னல் ஏற்படும் போது, மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது. வீட்டில், 'டிவி' இணைப்பை துண்டிக்க வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவனுார் மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகள், தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், வெள்ளக்காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரகுநாதன் தலைமையில், மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும், 'மழை குறித்த அறிவிப்புகளை கவனமாக கேட்க வேண்டும். அவசர கால பெட்டகம் தயார் செய்து, அதில் குடிநீர், ஆடைகள், டார்ச் லைட், தேவையான மருந்துகள், உலர் உணவுகள் வைத்துக்கொள்ள வேண்டும். வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மின் வாரியம் உள்ளிட்ட உள்ளூர் அலுவலர்களின் மொபைல் எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இடி, மின்னலின்போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. வீட்டில், 'டிவி' இணைப்பை துண்டிக்க வேண்டும். மரங்களின் கீழ் கண்டிப்பாக நிற்கக்கூடாது. தாழ்நிலையில் இருப்பவர்கள் காலதாமதமின்றி, கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் மேடான பகுதிக்கு செல்வது அவசியம். வெள்ள நீரின் ஆழம் மற்றும் மண்ணின் உறுதி தன்மையை அறிந்து கொள்ளவும், பாம்பு உள்ளிட்ட விஷ ஐந்துகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ளவும், நீண்ட குச்சியை கையில் வைத்துக் கொள்ள வேண்டும்' என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X