செய்தி செய்தி

தமிழ்நாடு

பட்டா திருத்த முகாமில் பயன்பெறலாம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: சிக்காரம்பாளையம் ஊராட்சியில் இன்று பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.மேட்டுப்பாளையம் வருவாய் துறை, ஒவ்வொரு ஊராட்சியிலும், பட்டா திருத்த சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், நில அளவை மற்றும் உட்பிரிவு எண் திருத்தம் செய்தல்,

மேட்டுப்பாளையம்: சிக்காரம்பாளையம் ஊராட்சியில் இன்று பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.மேட்டுப்பாளையம் வருவாய் துறை, ஒவ்வொரு ஊராட்சியிலும், பட்டா திருத்த சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், நில அளவை மற்றும் உட்பிரிவு எண் திருத்தம் செய்தல், பரப்பளவு திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்படுகிறது.வரும், 12ம் தேதி மருதூர் கிராம நிர்வாக அலுவலத்திலும், 17ல் காளம்பாளையம் தாயனூர் இ--சேவை மையத்திலும், 19ல் கெம்மாரம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், 24ல் வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலகத்திலும், 26ம் தேதி தோலம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் இச்சிறப்பு முகாம் இடம்பெறுகிறது. டிச., 1ம் தேதி சிக்கதாசம்பாளையம் நகராட்சி இ--சேவை மையத்திலும், 3ம் தேதி நெல்லித்துறை, தேக்கம்பட்டி ஆகிய இரு ஊராட்சிகளுக்கு, தேக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திலும் நடக்கிறது.தொடர்ந்து, 8ம் தேதி ஓடந்துறை கிராம நிர்வாக அலுவலகத்திலும், 10ல் சிறுமுகை நால்ரோட்டில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்திலும், 15ம் தேதி ஜடையம்பாளையம் ஊராட்சி, தொட்டபாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 17ல் பெள்ளேபாளையம் இ-சேவை மையத்திலும், 22ல் இலுப்பநத்தம் ஊராட்சி ரேயான் நகரிலும், 24ம் தேதி இரும்பரை கிராம நிர்வாக அலுவலகத்திலும், 29ல் முடுதுறை கூட்டுறவு கடன் சங்கத்திலும் இடம்பெறுகிறது.இதையடுத்து, 31ம் தேதி சின்னகள்ளிபட்டி ரங்கம்பாளையத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் முகாம் நடைபெறும் நிலையில், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என, மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X