சிக்கித்தவிக்கும் வாகனங்கள் காத்திருக்கும் பொது மக்கள்

Added : நவ 09, 2021
Share
Advertisement
அன்னுார்: அன்னுாரில், 20 இடங்களில் ஏற்பட்ட குழிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டம், அன்னுார், அவிநாசி கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு திட்டம் என மூன்று திட்டங்களுக்காக அன்னுார் நகரில் குழிதோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன.இதில் சரியான முறையில் மண் நிரப்பி சமன்படுத்தாததால் அன்னுாரில் பிரதான சாலையில், ஓதிமலை ரோடு

அன்னுார்: அன்னுாரில், 20 இடங்களில் ஏற்பட்ட குழிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டம், அன்னுார், அவிநாசி கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு திட்டம் என மூன்று திட்டங்களுக்காக அன்னுார் நகரில் குழிதோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன.இதில் சரியான முறையில் மண் நிரப்பி சமன்படுத்தாததால் அன்னுாரில் பிரதான சாலையில், ஓதிமலை ரோடு சந்திப்பு அருகே, அரை அடி ஆழத்திற்கு பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. இங்கு தினமும் இருசக்கர வாகனங்கள் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றன. இதேபோல், ஓதிமலை சாலையில், தெற்கு பள்ளி முன்புறம், மன்னீஸ்வரர் கோவில் முன்புறம், அவிநாசி சாலையில் சி.எஸ்.ஐ., பள்ளி முன்புறம், சத்தி ரோடு சந்திப்பு என, 20 இடங்களில் குழிகள் உள்ளன.இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கைவிடுத்தும் பயனில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.அலட்சியம் காரணமாக தினமும் விபத்துக்கள் நடந்துவருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு, சிறுமுகையில் இருந்து அன்னுார் வந்த டவுன் பஸ் ஓதி மலை ரோட்டில் பள்ளத்தில் சிக்கியது.பல மணிநேரம் போராடி குழியில் இருந்து மீட்டனர். இதனால் சிறுமுகை செல்ல வேண்டிய மக்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து அதன் பிறகு சிறுமுகை சென்றனர்.'நெடுஞ்சாலைத்துறையினர் விரைவில் அன்னுார் நகரில் உள்ள குழிகளை ஜல்லி கற்கள் இட்டு பராமரிக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X