'எஸ்கேப்' ஆன திருடன் கைது 10 சவரன் நகை பறிமுதல்

Added : நவ 09, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி: செந்தில் நகரில் வீடு புகுந்து திருடிய வழக்கில், மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.கடந்த வாரத்தில், சோமனுார் அடுத்த செந்தில் நகரை சேர்ந்த நிர்மலா என்பவரது வீட்டுக்குள் புகுந்த இரு நபர்கள், வெள்ளி பொருட்கள் மற்றும் எல்.இ.டி., 'டிவி'யை திருடிச்செல்ல முயன்றனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரையும் துரத்தியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்; மற்றொருவர்

கருமத்தம்பட்டி: செந்தில் நகரில் வீடு புகுந்து திருடிய வழக்கில், மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.கடந்த வாரத்தில், சோமனுார் அடுத்த செந்தில் நகரை சேர்ந்த நிர்மலா என்பவரது வீட்டுக்குள் புகுந்த இரு நபர்கள், வெள்ளி பொருட்கள் மற்றும் எல்.இ.டி., 'டிவி'யை திருடிச்செல்ல முயன்றனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரையும் துரத்தியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்; மற்றொருவர் தப்பினார்.பிடிபட்ட நபர் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஆயுதப்படை போலீஸ் முனீஸ்வரன் என்பது தெரியவந்தது. போலீசார் தனிப்படை அமைத்து மற்றொரு நபரை தேடி வந்தனர்.
கிட்டாம்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கு இடமாக, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த நபர் ஒருவரை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.அப்போது, அவர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முபாரக் அலி, 29 என்பதும், முனீஸ்வரனுடன் கூட்டு சேர்ந்து கருமத்தம்பட்டி பகுதியில் வீடு புகுந்து திருட்டுக்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 10 சவரன் நகை, மூன்று இரு சக்கர வாகனங்கள், 'டிவி' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X