செய்தி செய்தி

தமிழ்நாடு

காந்தை ஆற்றில் மோட்டார் படகு சேவை: இலவச பயணத்தால் மாணவர்கள் மகிழ்ச்சி

Added : நவ 09, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: காந்தை ஆற்றில் மோட்டார் படகு இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்களும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.சிறுமுகை அடுத்த லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் இடையே காந்தை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது தண்ணீரில் மூழ்கிவிடும். கடந்த இரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பாலம்



மேட்டுப்பாளையம்: காந்தை ஆற்றில் மோட்டார் படகு இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்களும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.சிறுமுகை அடுத்த லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் இடையே காந்தை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது தண்ணீரில் மூழ்கிவிடும்.
கடந்த இரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பாலம் மூழ்கியது. துவக்கத்தில், 60 மீட்டர் மட்டுமே, பொது மக்கள் பரிசல் பயணம் செய்து கடந்து வந்தனர். தற்போது சாலையும் தண்ணீரில் மூழ்கியதால், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர், லிங்காபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள், மாணவ, மாணவியர் அரை கி.மீ., துாரத்துக்கு மேல், பரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு பரிசல் மட்டுமே இருப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.இரு வாரங்களுக்கு முன்பு, தனியார் அமைப்பினர் மோட்டார் படகை இயக்கியபோது, படகு தண்ணீரில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எனவே, நன்கு பயிற்சி பெற்ற, மோட்டார் படகு ஓட்டுனர்களை வைத்து படகை இயக்க பொது மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து, ஒரு மோட்டார் படகு, லிங்காபுரம் கொண்டு வந்து, வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.பின்பு, பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ஏற்றிச்செல்லப்பட்டனர். மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா, சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் மோட்டார் படகு இயக்கத்தை துவக்கி வைத்தனர்.இச்சேவையானது காலை, மாலையில் தலா நான்கு முறை இயக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இயக்கப்படும் நிலையில், சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் இந்த மோட்டார் படகு இயக்கத்தை நிர்வகித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X