துளிகள் செய்தி

தமிழ்நாடு

சென்னியாண்டவருக்கு கும்பாபிஷேகம்: மேள, தாளத்துடன் தீர்த்தக்குடங்கள் வருகை

Added : நவ 09, 2021
Share
Advertisement
சூலுார்: பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறும் நிலையில், தீர்த்தக்குடங்கள் மேள, தாளத்துடன் கொண்டு வரப்பட்டது.சூலுார் அடுத்த பொன்னாண்டாம்பாளையத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்துவந்தன. பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கடந்த, 8ம் தேதி விநாயகர்



சூலுார்: பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறும் நிலையில், தீர்த்தக்குடங்கள் மேள, தாளத்துடன் கொண்டு வரப்பட்டது.சூலுார் அடுத்த பொன்னாண்டாம்பாளையத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்துவந்தன. பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கடந்த, 8ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று மதியம், மேள, தாளத்துடன் முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.மாலை முதல் காலயாக பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இன்று காலை, 4:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், கோவிலை வலம் வருகின்றன. காலை, 6:30 மணிக்கு மூலவர் சென்னியாண்டவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X