தமிழ்நாடு

வாழைத் தார்களின் விலை வீழ்ச்சி

Added : நவ 09, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம்--அன்னுார் சாலையில் உள்ள, தென்திருப்பதி நான்கு சாலை அருகே, தனியார் வாழைத்தார் ஏலம் மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரம் ஞாயிறு, புதன் ஆகிய இரு நாட்கள் வாழைத்தார் ஏலம் நடைபெறும். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார்,

மேட்டுப்பாளையம்: வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம்--அன்னுார் சாலையில் உள்ள, தென்திருப்பதி நான்கு சாலை அருகே, தனியார் வாழைத்தார் ஏலம் மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரம் ஞாயிறு, புதன் ஆகிய இரு நாட்கள் வாழைத்தார் ஏலம் நடைபெறும். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து, 4,700 வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
இதில் கதளி, நேந்திரன், ரோபஸ்டா, பூவன், ரஸ்தாளி, செவ்வாழை ஆகிய வாழைத்தார்கள் இடம் பெற்றன.ஏலத்தில் ஒரு கிலோ கதளி குறைந்தபட்சம், 20, அதிகபட்சம், 25 ரூபாய்க்கும், நேந்திரன், 20லிருந்து, 24க்கும் ஏலம் போனது. பூவன் ஒரு வாழைத்தார், 150லிருந்து, 450, ரஸ்தாளி, 200லிருந்து, 450க்கும், ரோபஸ்டா, 100லிருந்து, 250, தேன்வாழை, 100லிருந்து, 250க்கும், செவ்வாழை, 150லிருந்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.வாழைத்தார் ஏலம் மண்டியின் உரிமையாளர் வெள்ளிங்கிரி கூறுகையில்,''கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கதளி, நேந்திரனுக்கு ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை குறைந்துள்ளது. அதேபோன்று வாழைத்தார் விலையும், 50 ரூபாய் குறைந்து விற்பனையானது.மழை சமயத்தில் சாப்பிட்டால், சளி பிடிக்கும் என, மக்கள் மனதில் உள்ளதால், வாழைப்பழத்தின் தேவை குறைந்துள்ளது. விலை குறைவு என்பது கவலையை தருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X