கடந்த ஆண்டு 2.8 கோடி ஆண்டு வாழும் காலத்தை பலிகொண்ட கோவிட்

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லண்டன்: கடந்த ஆண்டு 2.8 கோடி வாழும் காலத்தை கோவிட் பலிகொண்டது என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை., ஆய்வு தகவல் அளித்துள்ளது.உலகம் முழுவதும் கோவிட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தற்போது ஓய்ந்துள்ளது. இந்நிலையில் கோவிட் தாக்கப்பட்டவர்களது ஆயுட்காலம் சராசரி ஆயுட்காலத்தைக் காட்டிலும் குறையுமா என்ற கேள்வி உலக விஞ்ஞானிகளிடையே எழுந்தது. இதுகுறித்து ஆக்ஸ்போர்ட்

லண்டன்: கடந்த ஆண்டு 2.8 கோடி வாழும் காலத்தை கோவிட் பலிகொண்டது என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை., ஆய்வு தகவல் அளித்துள்ளது.



latest tamil news




உலகம் முழுவதும் கோவிட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தற்போது ஓய்ந்துள்ளது. இந்நிலையில் கோவிட் தாக்கப்பட்டவர்களது ஆயுட்காலம் சராசரி ஆயுட்காலத்தைக் காட்டிலும் குறையுமா என்ற கேள்வி உலக விஞ்ஞானிகளிடையே எழுந்தது. இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.


latest tamil news




இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலை., விஞ்ஞானி நஸ்ருல் இஸ்லாம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பலர் மரணமடைந்தனர். இதனை அடுத்து 2020ஆம் ஆண்டு கோவிட்டால் ரஷ்யா, பல்கேரியா, அமெரிக்கா, போலாந்து உள்ளிட்ட 31 நாடுகளில் 2 கோடியே 80 லட்சம் ஆண்டு வாழும் காலத்தை கோவிட் குறைத்துள்ளது.

மேற்கண்ட 31 நாடுகளில் இதன்மூலமாக அந்தந்த நாட்டு குடிமக்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் நியூசிலாந்து, தைவான் உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தாக்கம் காரணமாக மக்களின் சராசரி ஆயுட்காலம் குறையவில்லை. நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் குடிமக்களுக்கு சராசரி ஆயுட்காலத்தைவிட அதிக ஆயுட்காலம் உள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-நவ-202105:47:24 IST Report Abuse
Kasimani Baskaran வெட்டியான ஆய்வு. ஒருவர் தடுப்பூசி போட்டிருக்கிறாரா, அவருக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி இருக்கிறதா, நுறையீரலுக்கு எவ்வளவு சேதம் என்பதைப் பொருத்துதான் சேதம் மதிப்பிடப்பட வேண்டும். பொத்தாம் பொதுவாக இந்த நாடுகளில் ஆயுள் கம்மியாகிவிட்டது என்றால் யார் நம்புவார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X