ரத்த 'ஸ்டெம்செல்' நன்கொடை முன்பதிவில் மாணவர்கள் ஆர்வம்

Added : நவ 09, 2021 | |
Advertisement
பெ.நா.பாளையம்: உலகில் பலரும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்வை இழந்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு விதமான நோயால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் வாழ்வை காப்பாற்றும் வகையில், ரத்த ஸ்டெம்செல் நன்கொடை விழிப்புணர்வு முகாம் இக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரியின் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ரத்த 'ஸ்டெம்செல்' நன்கொடையாளர்கள்

பெ.நா.பாளையம்: உலகில் பலரும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்வை இழந்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு விதமான நோயால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் வாழ்வை காப்பாற்றும் வகையில், ரத்த ஸ்டெம்செல் நன்கொடை விழிப்புணர்வு முகாம் இக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரியின் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ரத்த 'ஸ்டெம்செல்' நன்கொடையாளர்கள் அறிமுகம் மற்றும் பதிவு செய்யும் நிகழ்ச்சியை நடத்தினர்.இதில், சென்னை தாத்ரி ரத்த ஸ்டெம்செல் நன்கொடையாளர்கள் பதிவு துறை மேலாளர் திலகவதி, ரத்த ஸ்டெம்செல் நன்கொடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், ரத்த ஸ்டெம்செல் நன்கொடையாளர்களாக, தங்களை பதிவு செய்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் ராஜப்பன்,செயலர் அபர்ணா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X