பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை

Updated : நவ 10, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: -தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை தாக்க உள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பல மாவட்டங்களில் அதி கன மழை கொட்டித் தீர்க்கும் என்ற, 'ரெட் அலர்ட்'
இன்று , 3 நாட்கள், பல மாவட்டங்கள், மழை

சென்னை: -தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை தாக்க உள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பல மாவட்டங்களில் அதி கன மழை கொட்டித் தீர்க்கும் என்ற, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முன்னேற்பாடுகளுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், 6ம் தேதி இரவு முதல் மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழையால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, மாமல்லபுரம் மற்றும் செய்யூரில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது


இடி,மின்னல்இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் மற்றும் சென்னை மையத்தின் இயக்குனர் புவியரசன் ஆகியோர் வெளியிட்ட மழை எச்சரிக்கை:
தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை தமிழக கரையை நெருங்கும்.
எனவே, பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை முதல், அதி கன மழை வரை பெய்யும். இன்று முதல் நாளை காலை 8:30 மணி வரையில், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில், 20 செ.மீ.,க்கு மேலாக அதி கன மழை பெய்யும். இந்த பகுதிகள், ரெல் அலர்ட் எனப்படும் சிவப்பு வண்ண குறியீட்டில் காட்டப்பட்டுள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், 20 செ.மீ., வரையிலான மிக கன மழை பெய்யும். இவற்றுக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.


சென்னையில் கொட்டும்நாளை காலை 8:30 முதல், நாளை மறுதினம் காலை 8:30 மணி வரை, மழை எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்கள்:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில், 20 செ.மீ.,க்கு மேல் அதி கன மழை பெய்யும். இந்த மாவட்டங்கள் ரெட் அலர்ட் பட்டியலில் உள்ளன.ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 20 செ.மீ., வரையில் மிக கன மழை பெய்யும். இந்த மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மீனவர்களுக்கு...


தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகள், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, நாளை வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


முன்னேற்பாடு தேவை
ஏற்கனவே சென்னையில் பெய்த அதி கன மழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பெய்யும் கன மழையால், பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னேற்பாடுகளுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

* பொதுமக்கள் அனைவரும் இடி, மின்னல், பெருமழை சமயங்களில் வீட்டிற்கு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

* அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர, மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.

* ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளம் செல்லும் போது, தரைப் பாலங்களின் மேல் கடப்பதை தவிர்க்கவும்.

* நீர்நிலைகளில் இறங்காமல், குழந்தைகளை பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள், மோட்டார் வாகனங்களை மேடான பகுதிகளில் நிறுத்திக் கொள்ளவும்.

* கீழ்தளத்தில் வாழும் மக்கள், மின்னணு சாதனங்களை மேல்தளத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சாலை பள்ளங்கள், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளால் ஆபத்து ஏற்படும். எனவே, அதிகாலை வேளையில், இருட்டான நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.

* இடி, மின்னல் சமயங்களில் மரத்தடி மற்றும் உயர்ந்த கோபுரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கவும்
.

* குளிர்சாதன பெட்டி, 'டிவி' மற்றும் மின்சார உபகரணங்களை அணைத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


10 மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிக்கு 'லீவ்'வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. அதனால், மூன்று நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலுார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை பொதுத்துறை செயலர் ஜகந்நாதன் பிறப்பித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
10-நவ-202121:51:19 IST Report Abuse
sankaseshan இதென்னடா சென்னைக்கு வந்த சோதனை. வல்லரய்யா உண்மையை சொன்னால் உனக்கு ஏன் வலிக்கிறது? கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானது
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-நவ-202119:33:43 IST Report Abuse
வெகுளி "நிர்வாக சீர்கேட்டினால் தான் இப்படி மழைநீர் தேங்கி நிற்கிறது.... அமைச்சர்கள் சும்மா வர்றாங்க.... நிக்கறாங்க.... அரிசி குடுக்கற மாதிரி போட்டோக்கு போஸ் குடுத்துட்டு போயிடறாங்க"... இதை கூறியது யார் தெரியுமா நண்பர்களே?... ஹிஹி.... அதிமுக அல்ல... பா.ஜ. அல்ல.... ஹிஹி.. சொன்னது அவருதான்.... அவரேதான்... ஏனிந்த பித்தலாட்டம்....
Rate this:
Cancel
ABCDEFGH - Nellai,இந்தியா
10-நவ-202113:36:12 IST Report Abuse
ABCDEFGH ரெண்டு நாளைக்கு 144 தடை போட்டால் உயிர் சேதம் தவிர்க்கலாம்... நாம சொன்னா என்ன கேக்கவா போறாங்க.... சம்போ சிவசம்போ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X