அமெரிக்கா திரும்பிய இந்தியர்கள் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்

Added : நவ 09, 2021
Share
Advertisement
நியூயார்க்:அமெரிக்காவில் வெளிநாட்டு விமான பயணியர் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டுக்கு திரும்பிய இந்தியர்களை, அவர்களது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதும், அனைத்து நாடுகளிலும் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின்

நியூயார்க்:அமெரிக்காவில் வெளிநாட்டு விமான பயணியர் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டுக்கு திரும்பிய இந்தியர்களை, அவர்களது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.

கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதும், அனைத்து நாடுகளிலும் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் பயணியர் அமெரிக்கா வர, அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்நிலையில் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்ட வெளிநாட்டு பயணியர், நவம்பர் 8 முதல் அமெரிக்கா வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து டில்லியில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம், அமெரிக்காவின் நெவார்க் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இறங்கியது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள். கொரோனா தொற்றின் போது சொந்த ஊர்களில் சிக்கிய இவர்கள், வீட்டில் இருந்தபடி பணியாற்றி வந்தனர். விமானத்தில் இருந்து வந்த பயணியரை, இரு ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மகிழ்ச்சியில், அவர்களது உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் ஆரத் தழுவி வரவேற்றது பார்ப்போரை நெகிழச் செய்தது.

''இந்த நாளுக்குத் தான் காத்திருந்தேன்,'' என, தன்னை காண வந்த இரு மகள்களை கட்டியணைத்து, முத்த மழை பொழிந்தார் விபுல் ஷா. ஏராளமானோர் குடும்பத்தினரை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்திருக்க, நிர்மித் ஷெலாஜ், தன் தோழியை எதிர்பார்த்து காத்திருந்தார். அவரின் பொறுமையை சோதிக்கும் வகையில், அவரது தோழி ஜோலி தவே கடைசியாக வந்தார்.

தன் உடைமைகளில் வர வேண்டிய ஒரு பைக்கு காத்திருந்ததாக தெரிவித்த ஜோலி, நிர்மித் ஷெலாஜை சந்திக்கும் ஆர்வத்தில் பையை வீட்டிற்கு அனுப்பச் சொல்லிவிட்டு ஓடி வந்ததாக கூறினார். இருவரும் விமான நிலையத்தில் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை பரிமாறினர். ''நேரில் பார்ப்பது போன்ற மகிழ்ச்சி, இரண்டு ஆண்டுகளாக மொபைல் போனில் பார்த்ததில் இல்லை,'' என, நிர்மித் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X