துக்க வீட்டுக்கு சென்று வந்தவர்கள் அச்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துக்க வீட்டுக்கு சென்று வந்தவர்கள் அச்சம்

Added : நவ 09, 2021
Share
அன்னுார்: பொகலுாரில் கொரோனாவால் இறந்தவரின் வீட்டுக்கு சென்று வந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.பொகலுாரில், 29 வயது பெண் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கொரானா தொற்றும் ஏற்பட்டது.இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் அவர் கோவையில் இறந்தார். கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம், இறந்தவரின் உடலை தாங்களே பாதுகாப்பாக அடக்கம் செய்வதாக கூறி விட்டனர்.இறந்த

அன்னுார்: பொகலுாரில் கொரோனாவால் இறந்தவரின் வீட்டுக்கு சென்று வந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.பொகலுாரில், 29 வயது பெண் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கொரானா தொற்றும் ஏற்பட்டது.இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் அவர் கோவையில் இறந்தார். கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம், இறந்தவரின் உடலை தாங்களே பாதுகாப்பாக அடக்கம் செய்வதாக கூறி விட்டனர்.இறந்த பெண் ஒரு இயக்கத்தில் பொறுப்பில் இருந்து வந்தார். அன்னுார் ஒன்றிய முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி பிரமுகர்கள் பலர் அந்த வீட்டுக்குச் சென்று பெண்ணின் உறவினர்களிடம் துக்கம் விசாரித்துவிட்டு வந்தனர். இரண்டு நாட்கள் கழித்து தான் கொரோனா தொற்று காரணமாக அவர் இறந்தார் என்கிற தகவல் தெரிந்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டுக்கு சென்று வந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் அந்த வீட்டுக்கு யாரும் செல்லாமல் இருக்கும்படியும், அந்த வீட்டைச் சுற்றி உரிய சுகாதார நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். இதுகுறித்து, சுகாதாரத் துறையினர் பொதுமக்களை எச்சரிக்கை செய்திருக்க வேண்டும், என்றும், பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். அந்த வீட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X