அட்வகேட் ஜெனரல் ராஜினாமா ஏற்றார் பஞ்சாப் முதல்வர்

Added : நவ 09, 2021
Share
Advertisement
சண்டிகர்:பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் ஏ.பி.எஸ்.தியோலின் ராஜினாமாவை முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஏற்றுக் கொண்டார். பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ராஜினாமாவுக்கு பிறகு புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பொறுப்பேற்றார்.நியமனம்அப்போது, அட்வகேட் ஜெனரல் பதவி வகித்து வந்த அதுல் நந்தா தன் பதவியை ராஜினாமா

சண்டிகர்:பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் ஏ.பி.எஸ்.தியோலின் ராஜினாமாவை முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஏற்றுக் கொண்டார்.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ராஜினாமாவுக்கு பிறகு புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பொறுப்பேற்றார்.நியமனம்அப்போது, அட்வகேட் ஜெனரல் பதவி வகித்து வந்த அதுல் நந்தா தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய அட்வகேட் ஜெனரலாக ஏ.பி.எஸ்.தியோலை நியமித்து முதல்வர் சரண்ஜித் சிங் உத்தரவிட்டார்.

இந்த நியமனத்துக்கு பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தன் தலைவர் பதவியைராஜினாமா செய்தார். 'அட்வகேட் ஜெனரல் பதவி விலகினால் மட்டுமே தன் ராஜினாமாவை திரும்ப பெறுவேன்' என, தெரிவித்தார். முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சமரச முயற்சியை தொடர்ந்து சித்து தன் ராஜினாமாவை திரும்ப பெற்றார். ஆனால், ஏ.பி.எஸ்.தியோல் பதவி விலக தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.


சந்திப்பு

இந்நிலையில், முதல்வர் சரண்ஜித் சிங் - சித்து சமீபத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின், அட்வகேட் ஜெனரல் ஏ.பி.எஸ்.தியோல் தன் ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்தார்.தியோலின் ராஜினாமாவை ஏற்பதாக முதல்வர் சரண்ஜித் சிங் அறிவித்தார். இதன் வாயிலாக, சரண்ஜித் சிங் - சித்து இடையே இணக்கமான சூழல் நிலவுவது உறுதியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X