செய்தி செய்தி

தமிழ்நாடு

சமூகத்தில் பெண்களுக்கு தைரியம் முக்கியம்! விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுரை

Added : நவ 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: 'பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானால், தைரியமாக புகார் கொடுக்க வேண்டும்,' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் அறிவுறுத்தினர்.பொள்ளாச்சி ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில், கிழக்கு போலீசார் சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.எஸ்.ஐ., ஜெப்லா, தலைமை காவலர் சுமீதா ஆகியோர், பெண்களுக்கு எதிரான



பொள்ளாச்சி: 'பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானால், தைரியமாக புகார் கொடுக்க வேண்டும்,' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் அறிவுறுத்தினர்.பொள்ளாச்சி ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில், கிழக்கு போலீசார் சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.எஸ்.ஐ., ஜெப்லா, தலைமை காவலர் சுமீதா ஆகியோர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.போலீசார் பேசியதாவது:மாணவியரை யாராவது பின் தொடர்ந்து வந்தால், கண்காணித்து கண்டிக்க வேண்டும். பள்ளி பருவத்தில் வருவது காதல் இல்லை; அது ஒருவித ஈர்ப்பு தான் என்பதை உணர வேண்டும்.அறிமுகம் இல்லாதவர்கள் பேச்சு கொடுத்தால், தவிர்க்க வேண்டும். பெற்றோர், பெண் குழந்தைகளிடம் பாதுகாப்பான, பாதுகாப்பாற்ற தொடுதல் குறித்து விளக்க வேண்டும்.'போக்சோ' சட்டம், சிறுமிகள் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் தொல்லை, பலாத்காரம் செய்யப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டம் குறித்து மாணவியர் விழிப்புணர்வு பெற வேண்டும்.சமூகத்தில் பெண்களுக்கு தைரியம் முக்கியம், பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைக்கு யாராவது உள்ளாக்கினால், தைரியமாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும். சமூகவலைதளங்களில், மாணவிகள் போட்டோக்களை பதிவிட வேண்டாம்.
அடையாளம் தெரியாத நபர்களை, சமூக வலைதளத்தில் பின்தொடர வேண்டாம்.பள்ளி முடிந்து, வீடு திரும்பியதும், பள்ளியில் என்ன நடந்தது என்பதை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். தேவையில்லாத செயல்கள் இருந்தால் அதற்கேற்ப, பெற்றோர் அறிவுரைகளை வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X