கோர்ட் செய்தி

தமிழ்நாடு

5 ஆண்டுகளில் செய்தது என்ன? :மாநகராட்சிக்கு ஐகோர்ட் கேள்வி!

Updated : நவ 11, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (4+ 94)
Share
Advertisement
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக, சென்னை மாநகராட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், தற்போதுள்ள நிலைமை சீரடையும் என்று நம்புவதாகவும், இல்லையென்றால் வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும் எச்சரித்தது.சென்னை மாநகராட்சி 10வது மண்டலம் ரெட்டிகுப்பம் சாலையில், நடைபாதைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள, சாலையோர பூங்காவை அகற்றக் கோரி, பார்த்திபன் என்பவர் வழக்கு
5 ஆண்டுகள்,மாநகராட்சி, ஐகோர்ட் கேள்வி

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக, சென்னை மாநகராட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், தற்போதுள்ள நிலைமை சீரடையும் என்று நம்புவதாகவும், இல்லையென்றால் வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும் எச்சரித்தது.

சென்னை மாநகராட்சி 10வது மண்டலம் ரெட்டிகுப்பம் சாலையில், நடைபாதைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள, சாலையோர பூங்காவை அகற்றக் கோரி, பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

பொது நலனுக்கு எதிராக இருந்தால் நீதிமன்றம் தலையிடும் எனக்கூறிய முதல் பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இவ்வழக்கு விசாரணை முடிந்ததும், மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகா அசோக்கிடம், சென்னை நகரில் உள்ள வெள்ள பாதிப்பு குறித்து முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.

தலைமை நீதிபதி கூறியதாவது:
சென்னையில், 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சி தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையை, சென்னை நகரம் சந்தித்து இருக்கக் கூடாது.
சென்னையில் உள்கட்டமைப்பு வசதிக்காக, ஏராளமாக செலவிடப்பட்டதாக அறிகிறோம். நிலைமை விரைவில் சீராகும் என்று நம்புகிறோம். இல்லையென்றால், நாங்களாகவே வழக்கை விசாரணைக்கு எடுப்போம்.இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

இதையடுத்து, மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவிப்பதாக வழக்கறிஞர் கார்த்திகா கூறினார். அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக, அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார்.


நீதிபதிகள் வேதனை



அரியலுார் மாவட்டம், பெரிய திருக்கோணம் கிராமத்தில், மாமனக்கா ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, தமிழரசன் என்பவர் தொடர்ந்த வழக்கும், முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.இளவரசன், ''ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை, வெள்ள பெருக்கு, அரசு அதிகாரிகளுக்கு பாடம் கற்பித்துள்ளது. நீர் நிலைகளில் தண்ணீர் செல்லும் வழியை, யார் ஆக்கிரமிக்க முயன்றாலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை, அரியலுார் தாசில்தாருக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும். அவர் விசாரணை நடத்தி, நீர் நிலையில் ஆக்கிரமிப்பு இருந்தால் சட்டப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இந்த வழக்கு விசாரணையின் போதும், நீர் வழிப்பாதைகளில் எந்த தடையும் இருக்கக் கூடாது; ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று முதல் பெஞ்ச் தெரிவித்தது. 'ஆண்டில் பாதி நாட்கள் தண்ணீருக்காக அழுவதும், மீதி நாட்கள் தண்ணீரில் மிதக்கும் நிலையும் இருக்கிறது. எல்லா துறைகளிலும் முன்னேறி வரும் மாநிலத்தில் இப்படி நடக்கிறது' என, முதல் பெஞ்ச் வேதனை தெரிவித்தது.
தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டியிருப்பதாக, அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முக்கிய பிரச்னையாக இருப்பதாக முதல் பெஞ்ச் தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (4+ 94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
10-நவ-202112:21:05 IST Report Abuse
Nakkeeran ஜாதி சம்பந்தமான திரைப்படங்களை பார்ப்பதற்கும், படத்தை ஏடுத்தவரை பாராட்டவும், படத்தில் நடித்த யாரவது ஒரு வீட்டுக்கு சென்று அவர்களுக்கு கிடைத்த அரை வயிற்று சோற்றிலும் பாதியை புடுங்குவதர்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது யுவர் ஹானர் ,ஓய்வில்லாமல் ஒரு நாளைக்கு 26 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கிறோம் யுவர் ஹானர்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-நவ-202110:19:31 IST Report Abuse
RajanRajan கேள்வி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு ஜுட்ஜ் சாமிகளா. ஆனா பதில் ரொம்ப சிம்பிள். திட்டம் போட்டோம் நிறைவேற்றின மாதிரி கணக்கு எழுதினோம் வூட்டு கணக்கிலே வரவு வச்சுட்டோம் ஆட்சி நிர்வாகம் அதிகாரம் என பல அஸ்திரங்களை வைத்து விளையாடி விட்டார்கள். இப்போ பெருமழை கொட்டி உண்மை நிலவரங்களுக்கு ஈடு ஒடுக்க முடியாமல் அவனவன் ரெயின் கோட் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது தான் மிச்சம். அதிலே பாருங்க சாமி ஊழலுக்கு விதை விதைச்சு மரமாக கட்டி காத்தவன் இன்னொரு ஊழல்வாத கூட்டத்தை பார்த்து கேள்வி கேட்டு கேஸ் போடுவேன்னு கொந்தளிக்கான் பாருங்க. என்ன விடியாலடோ இது. எதோ இவனுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமே இல்லீங்கிற மாதிரில்லே சீன் போடுறான். ஹூம் அச்சன் காலத்துலே இருந்தே நீதிமன்றத்திற்கு நீதிபதிகளுக்கும் எறும்பு கரையான் முதலையை வச்சு பாடம் நடத்தி விருது வாங்கின பரம்பரையாச்சே. உங்களாலே கேள்வி தான் கேக்க முடியும் ஜுட்ஜ் சாமி. இவிங்கள உங்களாலே ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது இந்த திராவிட கட்டுமர ஊழல் சாம்ராஜ்யத்தை. இதெல்லாம் பார்க்கிறப்ப அந்த கனி அக்கா திருப்பதி பொம்மையை பார்த்து சிரிப்பை அடக்க முடியலேங்கிற மாதிரி தான் எங்களுக்கும் அடக்க முடியல்லே.. வாழ்க அண்ணா நாமம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-நவ-202108:53:30 IST Report Abuse
Mani . V "கடந்த ஐந்து ஆண்டுகளாக, சென்னை மாநகராட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், தற்போதுள்ள நிலைமை சீரடையும்......." அதுக்கு முன்னாடி மட்டும் மாநகராட்சி சிறப்பாக செய்து விட்டதாக்கும்? வடிகாலுக்கு என்று ஒதுக்கிய நிதியை எல்லாம் அவர்கள் ஒதுக்கிக் கொண்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X