செய்தி செய்தி

தமிழ்நாடு

அமராவதியில் வெளியேறும் உபரி நீர்: உப்பாறு ஓடையிலும் திறப்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை, அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஜூன் முதல் மே வரையிலான, நடப்பு நீர் ஆண்டில், தென்மேற்கு பருவ மழையால், ஜூலை 23ல் அணை நிரம்பி, தொடர்ந்து மூன்று மாதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.அதோடு, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் துவங்கப்பட்டு, ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர்



உடுமலை: உடுமலை, அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஜூன் முதல் மே வரையிலான, நடப்பு நீர் ஆண்டில், தென்மேற்கு பருவ மழையால், ஜூலை 23ல் அணை நிரம்பி, தொடர்ந்து மூன்று மாதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.அதோடு, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் துவங்கப்பட்டு, ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை துவங்கி, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தது. கடந்த, அக்., 27ம் தேதி, இரு மாவட்டத்தில், ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த, 3ம் தேதி அதிகாலை, அணைக்கு நீர் வரத்து அபரிமிதமாக உயர்ந்தது. வெள்ள காலங்களில், அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும், ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 87.50 அடியாக இருந்தது. நீர் இருப்பு, மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,821.43 மில்லியன் கன அடியாக இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 2,130 கன அடியாகவும், ஆற்று மதகு வழியாக, 2 ஆயிரம் கன அடியும், பிரதான கால்வாயில், 225 கன அடி நீரும் திறக்கப்பட்டிருந்தது.அதிகாரிகள் கூறுகையில், 'ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. உபரி நீரை வீணாக்காமல், ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியோர கிராமங்களிலுள்ள குளம், குட்டைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும், உப்பாறு ஓடையிலும் நீர் திறக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X