செய்தி செய்தி

தமிழ்நாடு

முருகப்பெருமானுக்கு மிஞ்சிய தெய்வமில்லை! சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் வழிபாடு

Added : நவ 09, 2021
Share
Advertisement
- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலையில், சூரசம்ஹார விழாவையொட்டி, நேற்று முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழாவில், நேற்றுமுன்தினம் முருகப்பெருமான் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. கோவில் வளாகத்தில் நேற்று மாலை, சூரசம்ஹாரம் நடந்தது.தாரகாசூரன், சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மனை, சக்திவேல் கொண்டு


- நிருபர் குழு -

பொள்ளாச்சி, உடுமலையில், சூரசம்ஹார விழாவையொட்டி, நேற்று முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழாவில், நேற்றுமுன்தினம் முருகப்பெருமான் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. கோவில் வளாகத்தில் நேற்று மாலை, சூரசம்ஹாரம் நடந்தது.தாரகாசூரன், சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மனை, சக்திவேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்தார். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.விரதமிருந்த பக்தர்கள், வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் பழவகைகள் கொண்டு பிரசாதம் தயாரித்து, வீடுகளில் முருகப்பெருமானுக்கு படைத்து விரதம் முடித்தனர்.விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர், முருகப்பெருமான் சிற்பத்துடன் திருவீதி உலா சென்று, வழக்கமாக சூரன் வதம் நடக்கும் இடங்களில், பூசணிக்காய் உடைத்தனர்.நெகமம்நெகமம், காளியப்பன்பாளையத்தில் ஸ்ரீதங்கவேல் அய்யன் வேலாயுதசாமி கோவிலில், நேற்று, விக்னேஷ்வர பூஜை, உற்சவருக்கு கலச பூஜை நடத்தது. முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியை தொடர்ந்து, மகா அபிஷேகம், கலச அபிஷேகமும், விரதமிருந்த பக்தர்களுக்கு தண்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று வேல்வாங்கும் உற்சவம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சூரசம்ஹார விழாவையொட்டி சூரன்களை வதை செய்யும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.உடுமலைஉடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், எழுந்தருளியுள்ள, சுப்ரமணிய சுவாமி சன்னதியில், நேற்று, முருகப்பெருமான், வேல் வாங்கும் உற்சவம் நடந்தது.சக்திவேலுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சூரனை வதம் செய்யும் போர்க்கோலத்தில், முருகப்பெருமான் எழுந்தருளி, நான்கு மூலைகளில், கஜமுகன், சிங்க முகன், பானுகோபன், சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு, மகா அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பின், நடந்த சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.இன்று, காலை 10:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X