சென்னை:அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி.,யில் மாணவர்களை சேர்க்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும்; ஆங்கில வழி பாட பிரிவுகளை அதிகரிக்கவும், பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டுஉள்ளார்.கொரோனா தொற்றுஇதன்படி, அரசின் தொடக்க பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.
மேலும், மாநிலம் முழுதும் செயல்படும் மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில் கொரோனா தொற்று பரவலால், இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.இந்த ஆண்டு கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுவதால், மீண்டும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகளுக்காக, விரைவில் நர்சரி பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்
.அறிவுறுத்தல்
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், இந்த மாதம் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், நர்சரி பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளது. ஆனால், மழை பாதிப்பு இல்லாத மற்ற மாவட்டங்களில், வழக்கம் போல் பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே, இந்த மாவட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற வகுப்புகளிலும், ஆங்கில வழி பாட பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையை முடித்து தயார் நிலையில் இருக்குமாறு, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE