அரசியல் செய்தி

தமிழ்நாடு

142 அடி நீர்மட்டத்தை 139.5 அடியாக குறைத்து வஞ்சிக்கிறது தி.மு.க.,: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Added : நவ 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கம்பம்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியவர் ஜெயலலிதா. அந்த உரிமையை காக்க முடியாமல் 139.5 அடியாக தி.மு.க., அரசு குறைத்து விவசாயிகளை வஞ்சித்து விட்டதாக தேனி மாவட்டம், கம்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.முல்லைப் பெரியாறு அணையில் 139 அடியை நீர்மட்டம் தொடும் முன்பு தமிழக அதிகாரிகள் தண்ணீர் திறந்ததையும்,
 142 அடி நீர்மட்டத்தை 139.5 அடியாக குறைத்து வஞ்சிக்கிறது தி.மு.க.,: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கம்பம்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியவர் ஜெயலலிதா. அந்த உரிமையை காக்க முடியாமல் 139.5 அடியாக தி.மு.க., அரசு குறைத்து விவசாயிகளை வஞ்சித்து விட்டதாக தேனி மாவட்டம், கம்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முல்லைப் பெரியாறு அணையில் 139 அடியை நீர்மட்டம் தொடும் முன்பு தமிழக அதிகாரிகள் தண்ணீர் திறந்ததையும், கேரளா, தமிழக அரசை கண்டித்தும் நேற்று கம்பத்தில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி எம்.பி. ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் முன்னிலை வகித்தனர்

.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜான் பென்னிகுவிக் தனது நகை, சொத்துக்களை விற்று பெரியாறு அணையை கட்டினார். 999 ஆண்டுகளுக்கு அணையின் நீரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று வரை அணை நம் கட்டுப்பாட்டில் உள்ளது.

2000 ம் ஆண்டில் கேரள அரசும் அங்குள்ள சில பத்திரிகைகளும் அணை பலமாக இல்லை என வதந்தி பரப்பியது. 2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெயலலிதா கேரள அரசிடம் பேசி, அணை பராமரிப்பு பணி செய்து புதுப்பொலிவாக மாற்றினார். அப்போது பராமரிப்பிற்காக அணையின் நீர் மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. பராமரிப்பு முடிந்து அணையின் நீர் மட்டத்தை மீண்டும் உயர்த்த கோரியதற்கு கேரள அரசு மறுத்தது.


உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொழில்நுட்பக்குழுவினரின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டது. தொழில்நுட்பகுழு ஆய்வு செய்து, அணை பலமாக உள்ளது என பரிந்துரை செய்தது. அதை ஏற்று உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை பராமரிப்பு செய்தபின் 152 அடியாக உயர்த்தலாம் என்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது.

இத் தீர்ப்பிற்கு பின் 2006 பிப்ரவரியில் கேரள அரசு சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயம் செய்தது. உடனே ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்து, இந்த மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது என்று வாதாடினார்.


கெட்ட நேரம் ஆரம்பம்

இந்த நேரத்தில் தான் நமக்கு கெட்ட நேரம் ஆரம்பமானது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 2006 முதல் 2011 வரை தி.மு.க., ஆட்சியில் எதையும் செய்யவில்லை. 2011 ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். 2013 ல் கேரள மீண்டும் பூகம்பம் ஏற்படும் என்று சந்தேகம் கிளப்பியது. உச்சநீதிமன்றம் மீண்டும் தொழில்நுட்ப குழுவினரை அனுப்பியது. அவர்கள் பூகம்பமே ஏற்பட்டாலும் அணைக்கு ஆபத்தில்லை என்றனர்.

பேபி அணையை பலப்படுத்த ரூ. 6.5 கோடி விடுவித்து ஒப்பந்ததாரர் இறுதி செய்து மணல், ஜல்லி, கம்பிகள் வல்லக்கடவு வழியாக அணைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்குள்ள மரங்கள் சிலவற்றை வெட்டினால் தான் பணி செய்ய முடியும் என்று ஒப்பந்ததாரர் கூறிவிட்டார். மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதிக்கவில்லை.


உரிமையை காப்பது கடமை

2013 ல் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம். இப்போது தி.மு.க. அரசு 139.5 அடியாக குறைத்து தமிழக விவசாயிகளை வஞ்சித்துள்ளது. 142 அடியாக உயரும் முன்பு தண்ணீரை திறந்துவிட்டது ஏன். அதற்கு உத்தரவிட்டது யார், அணையின் பாதுகாப்பு, இயக்குதல், பராமரிப்பு என அனைத்தும் நம்மிடம் உள்ளது.

142 அடியாக உயர்த்த நமக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், 139.5 அடியாக இருக்கும் போதே ஏன் தண்ணீரை திறந்துவிட்டீர்கள். இதற்கு துரைமுருகன் நீர்வள அதிகாரிகள் கூறினார்கள் என்கிறார்.

தென்மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நாம் பெற்று தந்த உரிமையை காப்பதும் நமது கடமையாகும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வில்லையென்றால் தென் மாவட்ட மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப் படும். இவ்வாறு பேசினார்.நகர் செயலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-நவ-202113:55:36 IST Report Abuse
Sampath Kumar வெறும் இரண்டு அடி உயர தண்ணீருக்கு இதனை அரசியல் சாபக்கேடு
Rate this:
Cancel
V. Vijayakumar - vellore,இந்தியா
10-நவ-202110:52:53 IST Report Abuse
V. Vijayakumar இந்த மாதிரி போராட்டம் எல்லாம் ஒன்றும் செய்யாது. கேரளாவிற்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் மறித்து ஒரு வாரம் தடை செய்தால் போதும். தெந்தமிழ்நாடு மக்கள் இந்த போராட்டம் செய்தால் கேரளா தானாக வழிக்கு வரும். அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
10-நவ-202110:50:59 IST Report Abuse
sankar ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த மனித தெய்வம் பென்னி குயிக் பற்றி பேச பன்னிருக்கு தகுதி இல்லை, கொள்ளையடித்ததில் சிறு பங்கையாவது தான தர்மத்துக்கு கொடுக்காமல், கப்பம் மாத்திரம் கட்டினீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X