செய்தி செய்தி

தமிழ்நாடு

வாரிக்கொடுக்கும் வடகிழக்கு பருவமழை சீசன்: வேகமாக நிரம்பும் குளங்கள்

Added : நவ 09, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் திருமூர்த்தி அணையிலிருந்து நீர் வழங்கப்பட்டு வருவதால், தளி கால்வாய் பாசனத்திற்குட்பட்ட ஒன்பது குளங்கள் நிரம்பி வருகின்றன.உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, ஏழு குளம் மற்றும் பூசாரிநாயக்கன்குளம், வலையபாளையம் குளங்களுக்கு, தளி வாய்க்கால் வழியாக, அரசாணை அடிப்படையில்,



உடுமலை: உடுமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் திருமூர்த்தி அணையிலிருந்து நீர் வழங்கப்பட்டு வருவதால், தளி கால்வாய் பாசனத்திற்குட்பட்ட ஒன்பது குளங்கள் நிரம்பி வருகின்றன.உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, ஏழு குளம் மற்றும் பூசாரிநாயக்கன்குளம், வலையபாளையம் குளங்களுக்கு, தளி வாய்க்கால் வழியாக, அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்படுகிறது. இக்குளங்கள் வாயிலாக, 2,643 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும், சுற்றுப்புற கிராமங்களிலுள்ள, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கிணறு, போர்வெல் என விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளன.திருமூர்த்தி அணையிலிருந்து குளங்களுக்கு நீர் வழங்கப்படும் நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ள வட கிழக்கு பருவ மழையாலும் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குளங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.தொடர் கண்காணிப்பு பெரிய குளம், 404 ஏக்கர் பரப்பளவும், 11.55 அடி உயரமும், 70.56 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டது. நேற்று காலை நிலவரப்படி, 10 அடி நீர் மட்டமும், 60 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் இருந்தது. குளம் நிரம்ப ஒரு அடி மட்டுமே மீதம் உள்ளதால், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.ஒட்டுக்குளம், 90 ஏக்கர் பரப்பு, 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவில், 7.20 அடி நீர்மட்டமும், 8.56 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.செங்குளம், 74.84 ஏக்கர் பரப்பளவும், நீர்மட்ட உயரம், 10 அடி, 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். நேற்று காலை நிலவரப்படி, 4.20 அடி நீர்மட்டமும், 3.74 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.67.49 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள செட்டிகுளத்தில், 7.5 அடிக்கு, 4.80 அடி நீர்மட்டம், 4.18 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.கரிசல் குளத்தில், 7.65 அடிக்கு, தற்போது, 6.80 அடி நீர்மட்டமும், 2.52 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. தினைக்குளம், 51.19 ஏக்கர் பரப்புடையது. 9.25 அடி நீர்மட்டத்துக்கு, 6.60 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான, 7.23 மில்லியன் கனஅடியில், 5.58 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.விரைவில் நிரம்பி ததும்பும்அம்மாபட்டி குளம், 31.22 ஏக்கர் பரப்பளவும், 4.50 அடி நீர்மட்ட உயரத்தில், நேற்று காலை, 3.90 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 1.76 மில்லியன் கனஅடியில், 1.68 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. இக்குளம் நிரம்பும் நிலையில் உள்ளது. வலையபாளையம் குளம், 52.80 ஏக்கர் பரப்பளவில், 10.33 அடி நீர்மட்டமும், நீர் கொள்ளளவு, 7.63 மில்லியன் கனஅடி உடையதாகும். நேற்று காலை நிலவரப்படி, 10.33 அடி நீர்மட்டமும், 7.79 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் இருந்தது. இக்குளம் நிரம்பி ததும்பி வருகிறது.அம்மாபட்டி குளம், மொத்த கொள்ளளவில், 95.45 சதவீதம் நிரம்பியும், பெரிய குளம், 85.03 சதவீதம் நீர் இருப்புடனும், கரிசல்குளம், 86.30 சதவீதம் நீர் இருப்புடனும், தினைக்குளம், 77.18 சதவீதம் நீர் இருப்புடனும் காணப்படுகிறது. ஒன்பது குளங்களில், மொத்த கொள்ளளவில், 75 சதவீதத்திற்கும் மேல் 4 குளங்களும், 50 சதவீதத்திற்கும் மேல், 4 குளங்களும், 29 சதவீதம் நீர் இருப்புடன் ஒரு குளமும் உள்ளது.ஏழு குளம் பாசனம் மட்டுமன்றி, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள, குளம், குட்டைகளும், ஓடைகளின் குறுக்கே உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X