பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் கன மழை: பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம்

Updated : நவ 11, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்யும் தொடர் மழையால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிஉள்ளன.தமிழகம் முழுதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு துவங்கிய மழை, 10 மணி நேரம் தொடர்ந்து பெய்தது.வேதனைஅம்மாபேட்டை, புத்துார், களக்குடி, பாபநாசம், திருவையாறு ஆகிய
டெல்டா மாவட்டங்கள், கன மழை,  ஏக்கர், பயிர்கள், சேதம்,

தஞ்சாவூர்: தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்யும் தொடர் மழையால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிஉள்ளன.

தமிழகம் முழுதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு துவங்கிய மழை, 10 மணி நேரம் தொடர்ந்து பெய்தது.


வேதனை


அம்மாபேட்டை, புத்துார், களக்குடி, பாபநாசம், திருவையாறு ஆகிய பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான பயிர்கள்,தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

வடிகால் வாய்க்கால் முறையாக துார் வாரப்படாததால், தண்ணீர் வடிந்து செல்லாமல், 15 நாட்களுக்கு முன் நடவு செய்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 'இந்த நிலை தொடர்ந்தால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள் முழுதும் வீணாகி விடும்' என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, 'வடிகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தத்தளிக்குது நாகை



நாகை மாவட்டத்தில், சில தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. சம்பா, தாளடி இளம்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுனாமி குடியிருப்புகள் மற்றும் தாழ்வான குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.கனமழையால் மக்கள் வெளியே வர அச்சப்பட்டு, வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, சுற்றுச்சூழல துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு, நிவாரண பணிகளை முடுக்கி விடும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதேபோல, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை தொடர்வதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


45 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்


தொடர் மழையால் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி முதல், கும்பகோணம் அருகே அணைக்கரை வரை உள்ள கிராமங்களில், கொள்ளிடக்கரையில் தாழ்வாக உள்ள பகுதிகளில், தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மை செயலருமான விஜயகுமார், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அத்துடன், கொள்ளிடம் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ள சேதங்களை தடுக்க, 45 ஆயிரம் மணல் மூட்டைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
10-நவ-202122:12:38 IST Report Abuse
M  Ramachandran சில மாமதங்களுக்கு முன் செய்த பாவங்கள் வினையை அறுக்கிறாதா? இறைவன் மகா மகா பெரியவன்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
10-நவ-202113:22:07 IST Report Abuse
raja வந்த ஆறுமாசத்துல தூறு வாரிட்டோமுன்னுள்ள சொன்னான் விடியலு..... எதுல வாருணானுவோ தூர?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X