பொது செய்தி

தமிழ்நாடு

குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் பணி: கோதவாடி குளமும் ததும்புமா?

Added : நவ 09, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: பாசன விவசாயிகள் ஒத்துழைப்புடன், கிணத்துக்கடவு கிழக்குப்பகுதி குட்டைகளுக்கு நீர் விட்டு நிரப்பும் நடவடிக்கை துவங்கியது.கிணத்துக்கடவு கிழக்குப்பகுதி கிராமங்களில், பருவமழை தீவிரமாக பெய்யாத காரணத்தால், வறட்சியால் தவிக்கிறது. விவசாயிகளின் வேதனைக்கு தீர்வு காணும் வகையில், குட்டைகளில் நீர் விட்டு நிரப்ப வேண்டும். கோதவாடி குளத்துக்கும் தண்ணீர்



கிணத்துக்கடவு: பாசன விவசாயிகள் ஒத்துழைப்புடன், கிணத்துக்கடவு கிழக்குப்பகுதி குட்டைகளுக்கு நீர் விட்டு நிரப்பும் நடவடிக்கை துவங்கியது.கிணத்துக்கடவு கிழக்குப்பகுதி கிராமங்களில், பருவமழை தீவிரமாக பெய்யாத காரணத்தால், வறட்சியால் தவிக்கிறது. விவசாயிகளின் வேதனைக்கு தீர்வு காணும் வகையில், குட்டைகளில் நீர் விட்டு நிரப்ப வேண்டும். கோதவாடி குளத்துக்கும் தண்ணீர் விடவேண்டும் என்றும் 'தினமலர்' நாளிதழ் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் டாக்டர் நாகராஜன் ஆகியோர் தலைமையில், பி.ஏ.பி., திட்ட முதன்மை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.மனுவில், கிணத்துக்கடவு கிழக்குப்பகுதி கிராமங்களான கொண்டம்பட்டி, காரச்சேரி, அரசம்பாளையம், குருநல்லிபாளையம், மெட்டுவாவி, வெள்ளேகவுண்டன்புதுார், மன்றாம்பாளையம், கோதவாடி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை விடப்பட்டது. இதற்காக, கோதவாடி குளத்துக்கும் தண்ணீர் வழங்க வலியுறுத்தப்பட்டது.தொடர்ந்து, வடசித்துார் பகுதி பி.ஏ.பி.,பாசன விவசாயிகள் சங்கம் சார்பிலும் குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தியது.ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பி.ஏ.பி., கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று காலை, மெட்டுவாவி, வெள்ளேகவுண்டன்புதுார் பகுதியில் அமைந்துள்ள குட்டைகள் நிரம்பியது. இன்று, வடசித்துார் பகுதியில் அமைந்துள்ள கோதவாடி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள, ஆறு தடுப்பணைகளும் நிரம்புகிறது.தொடர்ந்து, பாசன விவசாயிகளின் ஒத்துழைப்பு இருந்தால், கோதவாடி குளத்திலும் தண்ணீர் விட்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும், என, பி.ஏ.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X