பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல திட்ட பகுதி எல்லைகள் மாற்றம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
சென்னை:மண்டல திட்ட பகுதி எல்லைகள் எண்ணிக்கையை மாற்றி அமைத்து, வீட்டுவசதி துறை உத்தரவிட்டுள்ளது.நகர், ஊரமைப்பு சட்டப்படி, ஒவ்வொரு பகுதியிலும் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் முறைப்படுத்தப்படுகின்றன.இதில், எந்தெந்த பகுதிகள் நகரங்கள்; எவை நகரப் பகுதிகளில் வராதவை என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.இதற்காக, மண்டல திட்ட பகுதி என்று மாவட்டங்கள்,

சென்னை:மண்டல திட்ட பகுதி எல்லைகள் எண்ணிக்கையை மாற்றி அமைத்து, வீட்டுவசதி துறை உத்தரவிட்டுள்ளது.

நகர், ஊரமைப்பு சட்டப்படி, ஒவ்வொரு பகுதியிலும் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் முறைப்படுத்தப்படுகின்றன.இதில், எந்தெந்த பகுதிகள் நகரங்கள்; எவை நகரப் பகுதிகளில் வராதவை என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.இதற்காக, மண்டல திட்ட பகுதி என்று மாவட்டங்கள், வட்டங்கள் பிரிக்கப்படுகின்றன.

இதன்படி, தமிழகம் முழுமையும், 15 மண்டல திட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. இதன் எல்லை வரையறை, உள்ளடக்க பகுதிகள் ஆகியவை, காலத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றன.இதனால், தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப, மண்டல திட்ட பகுதி எல்லைகள் மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, 12 மண்டல திட்ட பகுதிகள் குறித்த பட்டியலை, வீட்டுவசதி துறை வெளியிட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, மாவட்ட அளவில் திட்ட பகுதிகள் குறித்த முழுமையான விபரங்கள் படிப்படியாக வெளியிடப்படும் என தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு பின், அரசு எடுத்துள்ள இந்நடவடிக்கைக்கு, கட்டு மான துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X