செய்தி செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் உத்தரவுப்படி கல்குவாரியில் ஆய்வு

Added : நவ 09, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடபுதுார் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியை, ஐகோர்ட் உத்தரவுப்படி, சப் - கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.கிணத்துக்கடவு, வடபுதுார் பகுதியில், விளை நிலங்களுக்கு நடுவே, கடந்த, 18 ஆண்டுகளாக, தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்படுகிறது. குவாரிக்கு, கருங்கல் லோடு கொண்டு செல்ல, ஊராட்சி ரோடுகள் வழியே, கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடபுதுார் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியை, ஐகோர்ட் உத்தரவுப்படி, சப் - கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.கிணத்துக்கடவு, வடபுதுார் பகுதியில், விளை நிலங்களுக்கு நடுவே, கடந்த, 18 ஆண்டுகளாக, தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்படுகிறது.
குவாரிக்கு, கருங்கல் லோடு கொண்டு செல்ல, ஊராட்சி ரோடுகள் வழியே, கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், கிராம ரோடு உருக்குலைவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், விவசாயிகளில் சிலர், சம்பந்தப்பட்ட குவாரியால் மழை நீர் ஓடையும், விளை நிலங்களில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறுகளும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, குவாரியை தடை செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருவாய்துறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார், கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா உள்ளிட்டோர், சம்பந்தப்பட்ட குவாரியை நேற்று ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X