கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா காவல் நீட்டிப்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு:பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு, 'போக்சோ' வழக்கில் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 74. இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியர் புகார் அளித்தனர்.காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்து,

செங்கல்பட்டு:பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு, 'போக்சோ' வழக்கில் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 74. இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியர் புகார் அளித்தனர்.காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், அதே பள்ளியில் பெண்களை மானபங்கம் செய்ததாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், அவரை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து, நீதிபதி தமிழரசி முன்ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பின், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X