தந்தை - மகன் பலி; 3 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை - மகன் பலி; 3 பேர் காயம்

Added : நவ 09, 2021
Share
தலைவாசல்:லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், தந்தை - மகன் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர்.திருவண்ணாமலை, தண்டராம்பட்டைச் சேர்ந்தவர் ஜெயராமன், 48. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மனைவி சிந்தாமணி, 45; மகன் வசந்தகுமார், 21; மகள் கவுரி, 17.இவர்கள், தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு, குடும்பத்துடன் மாருதி ஆம்னி வேனில் கோவைக்கு புறப்பட்டனர்.

தலைவாசல்:லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், தந்தை - மகன் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை, தண்டராம்பட்டைச் சேர்ந்தவர் ஜெயராமன், 48. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மனைவி சிந்தாமணி, 45; மகன் வசந்தகுமார், 21; மகள் கவுரி, 17.இவர்கள், தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு, குடும்பத்துடன் மாருதி ஆம்னி வேனில் கோவைக்கு புறப்பட்டனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, தலைவாசல், பெரியேரி, எஸ்.ஆர்.எம்., பள்ளி அருகே சென்றபோது, முன்புறம் சென்ற லாரி மீது வேன் மோதியது.இதில், ஜெயராமன், வசந்தகுமார் உயிரிழந்தனர். சிந்தாமணி, கவுரி, ரஞ்சித்குமார், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X