சிக்னல் பகுதியில் 'பல்லாங்குழி' சீரமைக்க தாமதம் எதற்கு?

Added : நவ 09, 2021
Share
Advertisement
பல்லடம்: காரணம்பேட்டை சிக்னலில் 'பல்லாங்குழி' ரோட்டை சீரமைப்பதில், அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி- மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் இடமாக காரணம்பேட்டை உள்ளது.இதனால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், காரணம்பேட்டை சிக்னலை கடந்து செல்கின்றன. நால்ரோடு சிக்னல்

பல்லடம்: காரணம்பேட்டை சிக்னலில் 'பல்லாங்குழி' ரோட்டை சீரமைப்பதில், அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி- மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் இடமாக காரணம்பேட்டை உள்ளது.இதனால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், காரணம்பேட்டை சிக்னலை கடந்து செல்கின்றன. நால்ரோடு சிக்னல் பகுதியில், ரோடு மிகவும் சேதமடைந்து உள்ளது.வாகன ஓட்டிகள் கூறியதாவது:நால்ரோடு சிக்னலில் ரோடு சேதமடைந்து, பல்லாங்குழி போன்று ஏரானமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சிக்னல் விழுந்ததும் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகி வருகின்றன.தினமும் நுாற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்களும் இவ்வழியாக செல்கின்றன. சிக்னலில், சேதமடைந்த ரோட்டை யார் சீரமைப்பது என்பதில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.அதிகளவில் விபத்து ஏற்படுவதால், ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, சமீபத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தின் போதும், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தோம்.இருந்தும், இதுவரை ரோட்டை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X