ஒரு போன் போதுமே...

Added : நவ 09, 2021
Share
Advertisement
கால்வாய் கட்ட இடையூறுதிருப்பூர், காந்தி நகர் 3வது வீதியில் தண்ணீருக்காக அமைக்கப்பட்ட மோட்டர் பழுதாகி, இணைப்பும் துண்டிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடத்தில், சாக்கடை கால்வாய் கட்ட முடியாமல் இருந்து வருகிறது.- ராகவேந்திரன், காந்தி நகர்.பொதுமக்கள் அவதிதிருப்பூர், தோட்டத்துப்பாளையம், லட்சுமி நகரில் ரோட்டில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. அதில்,

கால்வாய் கட்ட இடையூறுதிருப்பூர், காந்தி நகர் 3வது வீதியில் தண்ணீருக்காக அமைக்கப்பட்ட மோட்டர் பழுதாகி, இணைப்பும் துண்டிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடத்தில், சாக்கடை கால்வாய் கட்ட முடியாமல் இருந்து வருகிறது.- ராகவேந்திரன், காந்தி நகர்.பொதுமக்கள் அவதிதிருப்பூர், தோட்டத்துப்பாளையம், லட்சுமி நகரில் ரோட்டில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. அதில், மழை நீர் தேங்கி நிற்கிறது. அருகே குப்பையும் கொட்டப்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.- அங்குராஜ்,தோட்டத்துப்பாளையம்.
போக்குவரத்துக்கு இடையூறுதிருப்பூர், அம்மாபாளையம், அவிநாசி ரோட்டில் ரோட்டின் இருபுறங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் முன், வாகனங்கள் நிறுத்துகின்றனர். சாக்கடை கால்வாய் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு கடைகளை அமைத்து கொள்கின்றனர்.- சுப்ரமணி, அம்மாபாளையம்.தேங்கி நிற்கும் கழிவுநீர்திருப்பூர், கருப்பகவுண்டம்பாளையத்தில், பெரிய அளவில் குழி மூடப்படாமல் இருந்து வருகிறது. அதில், கழிவுநீர், மழை நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அவ்வழியாக மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.- ரங்கசாமி, கல்லாங்காடு.திருப்பூர், ஈஸ்வரன் கோவில் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகமாக இருந்து வருகிறது.- கவிதா, பழைய பஸ் ஸ்டாண்ட்.பஸ் வசதி வேண்டும்ஊத்துக்குளி தாலுகா அலுவலகம் வழியாக பஸ்கள் செல்வதில்லை. இதனால், அங்கு செல்லும் பல தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஊத்துக்குளி ஆர்.எஸ். செல்லும் பஸ்கள் இந்த வழியாகச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.- மாரிமுத்து, ஊத்துக்குளி.பாதாள சாக்கடை தேவைதிருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49வது வார்டு, தெற்கு தோட்டம் 6 வது வீதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும்.- விஸ்வநாதன், தெற்கு தோட்டம்.ரோடு சகதியானதுதென்னம்பாளையம், ராமையா கவுண்டர் லே-அவுட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குறுக்கு வீதிகள் உள்ளன. வளர்ச்சி பணிக்காக தோண்டிய குழிகள் முறையாக மூடப்படவில்லை. மழையால் இந்த ரோடுகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறி பெரும் சிரமமாக உள்ளது.- சந்தோஷ்குமார்,ராமையா கவுண்டர் லேஅவுட்.
நீர் நிரம்பாத குளம்அவிநாசி, புதுப்பாளையம் குளம்பெரிய அளவிலான பரப்பளவு கொண்டது. பல பகுதிகளில் மழை பெய்தும், இந்த குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பரமசிவம், புதுப்பாளையம்.வீணாகும் குடிநீர்தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு முதல் வீதியில் குடிநீர் சப்ளைக்கு பயன்படும் கேட் வால்வு உள்ளது. சில நாட்களாக இதில் அதிகளவில் குடிநீர் வெளியேறி ரோட்டில் பாய்ந்து வீணாகிறது. சீரமைக்க வேண்டும்- பாலசிவகுமார், கரட்டாங்காடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X