தண்ணீரில் மூழ்கிய ரோடு; பரிசல் இருந்தால் பரவாயில்ல...| Dinamalar

தண்ணீரில் மூழ்கிய ரோடு; பரிசல் இருந்தால் பரவாயில்ல...

Added : நவ 09, 2021
Share
பல்லடம்: பாச்சாங்காட்டுப் பாளையத்தில், தண்ணீரில் மூழ்கிய ரோட்டை கடக்க பரிசல் போக்குவரத்து துவங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்லடம் அருகே அருள்புரம் - பாச்சாங்காட்டுப்பாளையத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். - அங்கிருந்து கணபதிபாளையம் செல்லும் ரோட்டில், பெரிய அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி

பல்லடம்: பாச்சாங்காட்டுப் பாளையத்தில், தண்ணீரில் மூழ்கிய ரோட்டை கடக்க பரிசல் போக்குவரத்து துவங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல்லடம் அருகே அருள்புரம் - பாச்சாங்காட்டுப்பாளையத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். - அங்கிருந்து கணபதிபாளையம் செல்லும் ரோட்டில், பெரிய அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்று, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.பொதுமக்கள் கூறியதாவது:கணபதிபாளையம் செல்லும் இந்த ரோட்டில், எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. சாய ஆலைகள் அதிகம் உள்ளதால், கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், பள்ளம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகின்றன.பள்ளம் விரிவடைந்து, அதில் மழைநீர் தேங்கி நிற்பதால், ரோடு முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. இருசக்கர வாகனங்களில் ரோட்டை கடந்து செல்வது மிகவும் ஆபத்தானது. ரோட்டை கடக்க பரிசலில்தான் சென்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X