திருப்பூர்: மழை பாதிப்பு குறித்து புகார் கூற அமைத்த கட்டுப்பாட்டு அறை போன் இணைப்பு பழுதானதால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழை பாதிப்பு குறித்து புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது.இங்கு சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியமர்த்தி, மழை பாதிப்பு பிரச்னை குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கும் வகையில், 0421 232 1500 என்ற தொலைபேசி எண் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.இங்கு பெறப்படும் தகவல்கள் உரிய பகுதி உதவி கமிஷனர்களுக்கு அளித்து நடவடிக்கை எடுக்கவும், இது குறித்த விவரங்கள் பதிவு செய்யவும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.ஆனால், இந்த இணைப்பு நேற்று பழுதாகி இயங்கவில்லை.
இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் பயன்பாடு சோதனை செய்த பின்னரே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக இந்த இணைப்பு பழுதாகிவிட்டது. அதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக சரி செய்யப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE