பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல்: 24ம் தேதிக்குள் இறுதி செய்ய உத்தரவு

Added : நவ 09, 2021
Share
Advertisement
அவிநாசி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியலை, வரும், 24ம் தேதிக்குள் தயாரிக்க, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால், பணிகள் வேகமெடுத்துள்ளன.தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில், 100 சதவீத ஓட்டளிப்பை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர்



அவிநாசி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியலை, வரும், 24ம் தேதிக்குள் தயாரிக்க, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால், பணிகள் வேகமெடுத்துள்ளன.தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில், 100 சதவீத ஓட்டளிப்பை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர் பட்டியலில் துல்லிய தன்மையை கொண்டு வர, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, சில நாட்களுக்கு முன், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கைப்படி ஓட்டுச்சாவடிகளை தயார் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.'வாக்காளர் பட்டியலில் திருத்தம், குறைகளை சரி செய்து, வரும், 24ம் தேதிக்குள், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அச்சுப்பணியை முடிக்க வேண்டும் எனவும், வரும், 25ம் தேதி, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டும். 27ம் தேதி, வாக்காளர் பட்டியல் இறுதி அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளது.அதற்கேற்ப, வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தினர் வேகம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X