பூண்டி பேரூராட்சிக்கு தேர்தல் நடக்குமா?

Added : நவ 09, 2021
Share
Advertisement
அவிநாசி: திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு, தேர்தல் நடத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில், 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வகையில், மாவட்டத்தில், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்கான பணியில் தேர்தல் கமிஷன் வேகம் காட்டி

அவிநாசி: திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு, தேர்தல் நடத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில், 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வகையில், மாவட்டத்தில், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்கான பணியில் தேர்தல் கமிஷன் வேகம் காட்டி வருகிறது.திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த ஆனந்தன், அவிநாசி, பேரூராட்சி செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பாக, திருமுருகன்பூண்டியையும் கவனித்து வருகிறார். சில நாட்களில், கமிஷனர் பணியிடம் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், நகராட் சிகளில் தேர்தல் நடத்த, குறைந்தது, 21 வார்டுகள் இருக்க வேண்டும். பூண்டியில், 15 வார்டுகள் மட்டுமே உள்ளன. எனவே, கமிஷனர் பணியிடம் நிரப்பப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பின், இரண்டாம் கட்டமாக தான் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.ஆனால், 'தற்போதைய பேரூராட்சி நிலையிலேயே தேர்தல் நடத்தப்பட்டு விடும். அதன்பிறகு, நகராட்சி அந்தஸ்துக்குரிய, நிலைப்பாட்டுக்கு மாற்றப்படும்,' என, அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். எனவே, திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு தேர்தல் நடத்தப்படுமா என்பதில், குழப்பம் நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X