எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

4 ஆண்டுகளில் கூவத்தில் போட்ட ரூ.311 கோடி வீணடிப்பு

Updated : நவ 10, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை :அடையாறு மற்றும் கூவம் ஆறுகள் புனரமைப்பு பணிகளுக்கு, நான்கு ஆண்டுகளில், 311 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கும் கூவம் ஆறு, சென்னையில் 20 கி.மீ., உட்பட 65 கி.மீ., பயணித்து, நேப்பியர் பாலம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பருத்திப்பட்டு வரை, இந்த ஆற்றில் நல்ல நீரோட்டம் உள்ளது. அதன்பின்,
ஆண்டுகள், கூவம்,   வீணடிப்பு

சென்னை :அடையாறு மற்றும் கூவம் ஆறுகள் புனரமைப்பு பணிகளுக்கு, நான்கு ஆண்டுகளில், 311 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கும் கூவம் ஆறு, சென்னையில் 20 கி.மீ., உட்பட 65 கி.மீ., பயணித்து, நேப்பியர் பாலம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பருத்திப்பட்டு வரை, இந்த ஆற்றில் நல்ல நீரோட்டம் உள்ளது. அதன்பின், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு நீர், கூவம் ஆற்றில் விடப்படுகிறது. சென்னையில் கூவம் ஆறு, கழிவு நீர் வடிகாலாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, காஞ்சி புரம் மாவட்டத்தில் மணிமங்கலம் அருகே துவங்கும் அடையாறு, 42.5 கி.மீ., பயணித்து, பட்டினப்பாக்கம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் வழியாகவும் கழிவு நீர் வெளியேறி வருகிறது.


அடையாறு, கூவம் ஆறுகளில், நல்ல நீரோட்டத்தை ஏற்படுத்த, பல ஆண்டுகளாக திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்காக, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் நீர்வளத்துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இடம் பெற்றுள்ளன.
முதற்கட்டமாக, அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை துார் வாரி, அதில் இருந்து திட மற்றும் திரவ கழிவுகளை அகற்றுவதற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்பு சுவர் அமைப்பதற்கும் 646 கோடி ரூபாய், 2018ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 311 கோடி ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


சீரமைக்க வேண்டிய அவசியம்



நீர்வளத் துறை மட்டும், 51 கோடி ரூபாய்க்கு துார் வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சி வாயிலாக, 22 கோடி ரூபாயும், சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 77.4 கோடி ரூபாயும் செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், பலன் கிடைக்கவில்லை. முழுமையாக பணிகளை மேற்கொண்டு இருந்தால், தற்போதைய மழையால், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு
இருக்காது.இதற்கிடையே, இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொள்ள, 2020 டிச., மாதம் 1,282 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதிலும், பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிதியையாவது முழுமையாக பயன்படுத்தி, பணிகளை மேற்கொண்டு அடையாறு, கூவம் ஆறுகளை முறையாக சீரமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
10-நவ-202122:34:13 IST Report Abuse
RajanRajan யாருடா அங்கே கொட்டும் சூட்டுமா உலாத்துறது. அண்ணா அவருதான் மழைநீர் வடிகால் ஆராய்ச்சியாளர் விடியல்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-நவ-202122:31:04 IST Report Abuse
RajanRajan இரு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஊழல் தூர் வாரிக்கிறானுங்க. உருப்படியா எதுவுமே இவனுங்களாலே செய்ய முடியாது. இவனுங்க இருக்கும் வரை சென்னை இப்படி தான் நீராடி கொண்டிருக்கும்
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
10-நவ-202122:21:02 IST Report Abuse
T.sthivinayagam ஐந்து வருடமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜகவிற்கு இதை கேட்பதற்கு பதில் எம்எல்ஏ சீட் வாங்குவது முக்கியமானதான இருந்திருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X