மாதிரி ஓட்டுப்பதிவு; மின்னணு இயந்திரத்தில் சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாதிரி ஓட்டுப்பதிவு; மின்னணு இயந்திரத்தில் சோதனை

Added : நவ 09, 2021
Share
திருப்பூர்: மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தும் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரி பார்த்து தயார் செய்யும் பணி நேற்று துவங்கியது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல், வரைவு ஓட்டுச் சாவடி பட்டியல் ஆகியன தயார் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் ஏற்பாடு

திருப்பூர்: மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தும் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரி பார்த்து தயார் செய்யும் பணி நேற்று துவங்கியது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல், வரைவு ஓட்டுச் சாவடி பட்டியல் ஆகியன தயார் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் மற்றும் மேயர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் பயன்படுத்தவுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில், ஓட்டுப் பதிவுக்கு இந்த இயந்திரங்களைத் தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், இயந்திரங்கள் சரிபார்ப்பு செய்து தயார்படுத்தும் பணி நேற்று துவங்கியது.மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணி நேற்று துவங்கியது. மாநகராட்சி தேர்தலுக்கு பயன்படுத்தவுள்ள, 2 ஆயிரம் இயந்திரங்களில் நேற்று முதல் கட்டமாக 200 இயந்திரங்கள் வெளியே எடுத்து சரி பார்ப்பு பணி துவங்கியது. இவற்றில் மாதிரி ஓட்டுப் பதிவு செய்து அரசியல் கட்சியினர் சரி பார்த்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X