தமிழ்நாடு

கந்தசஷ்டி சூரசம்ஹார வைபவம் கோலாகலம்: அசுரனை மாய்த்த வேல்! பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் சோகம்

Updated : நவ 10, 2021 | Added : நவ 09, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் வளாகத்தில், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது.தீபாவளி பண்டிகை நிறைவு பெற்றதும், அன்றைய இரவு முதல் கந்தசஷ்டி விரதம் துவங்கியது. முருக பக்தர்கள், கோவில்களுக்கு சென்று, காப்பு அணிந்து கொண்டு விரதத்தை துவக்கினர். ஆறாவது நாளான நேற்று, சூரசம்ஹார விழா நடந்தது.கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட
கந்தசஷ்டி சூரசம்ஹார வைபவம் கோலாகலம்: அசுரனை மாய்த்த வேல்! பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் சோகம்

திருப்பூர்: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் வளாகத்தில், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது.
தீபாவளி பண்டிகை நிறைவு பெற்றதும், அன்றைய இரவு முதல் கந்தசஷ்டி விரதம் துவங்கியது. முருக பக்தர்கள், கோவில்களுக்கு சென்று, காப்பு அணிந்து கொண்டு விரதத்தை துவக்கினர். ஆறாவது நாளான நேற்று, சூரசம்ஹார விழா நடந்தது.கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும், சூரசம்ஹார நிகழ்ச்சியில், பக்தர் தரிசனம் அனுமதிக்கப்படவில்லை.
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் வளாகத்தில், சூரம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.முருகப்பெருமான், அன்னையிடம் பெற்ற சக்திவேலுடன் சென்று, சூரனை வதைத்து, பக்தர்களுக்கு, ஜெயந்திநாதராக காட்சியளித்தார். பக்தர்கள், தொலைவில் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.l அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீசுப்ரமணியருக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடத்தப்பட்டு, கோவில் வளாகத்திலேயே, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது; பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக, 108 சங்காபிேஷக பூஜைகள் நடைபெற்றன.
lதிருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சண்முக ஸ்ரீசுப்ரமணியர் கோவிலில், மூலவருக்கு மட்டும் அபிேஷகம் நடந்தது. சூரசம்ஹார உருவாரங்களை, கோவில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்து, பூஜைகள் நடந்தன; பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவில், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, சுப்பிரமணியர் சன்னதி, வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் உட்பட, பல்வேறு முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா நடந்தது.
கண்டியன்கோவில் அருகே குளத்துப்பாளையம், கனககிரிமலை வேலாயுதசுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் நடைபெற்றது. விசாலாட்சியம்மனிடம் வேல் பெற்ற, வேலாயுதசுவாமி, கிரிவலப்பாதையில் கூடிநின்ற பக்தர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புடைசூழ, கந்தனுக்கு அரோகரா கோஷம் விண்ணதிர, சூரபத்மனை, சம்ஹார மூர்த்தியான வேலாயுதசுவாமி வதம் செய்தார். அலங்கார பூஜைக்குப்பின் மஹா தீபாராதனை நடந்தது.
கந்தசஷ்டி - சூரசம்ஹார நிகழ்ச்சியை காண, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், முருகன் கோவில்களில் பக்தர் தரிசனம் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கிராமப்புறங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அனைத்து முருகன்கோவில்களிலும், சூரனை வதம் செய்த சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது. விரதம் இருந்த பக்தர்களுக்கு, நேற்று, மோரில் ஊறவைத்த வாழைத்தண்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சஷ்டி விரதம் இருந்த முருக பக்தர்கள், இன்று முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று, விரதத்தை பூர்த்தி செய்ய உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X