டேக்வாண்டோ போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

Added : நவ 09, 2021
Share
Advertisement
திருப்பூர்: மேற்கு மண்டல டேக்வாண்டோ போட்டியில், இடுவம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.தமிழ்நாடு மேற்கு மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 7 மற்றும் 8ம் தேதி நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், திருப்பூர், இடுவம்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று வெற்றி

திருப்பூர்: மேற்கு மண்டல டேக்வாண்டோ போட்டியில், இடுவம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.தமிழ்நாடு மேற்கு மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 7 மற்றும் 8ம் தேதி நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், திருப்பூர், இடுவம்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று வெற்றி பெற்றனர்.இவர்களில், சினேகா, 46 கிலோ பிரிவில் இரண்டாமிடமும், தனி நபர் பிரிவில் முதலிடமும் பிடித்தார். 47 கிலோ மற்றும் தனி நபர் பிரிவில், தனிஷ்கா, சசியாதேவி முதலிடம், 35 கிலோ பிரிவில், ஸ்ரீஹரிகரன் மூன்றாமிடம் பிடித்தார்.இதனால், இவர்கள் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் சாதித்த மாணவ, மாணவியரை, தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குநர் மகேந்திரன், ஆசிரியர்கள் உட்பட பலரும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X