செய்தி செய்தி

தமிழ்நாடு

இழந்த இயற்கையை திரும்ப பெற வேண்டும்! மாவட்ட நீதிபதி ஆதங்கம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
பல்லடம்: கடந்த காலங்களில் இழந்த இயற்கையை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என, மாவட்ட நீதிபதி அறிவுறுத்தினார்.பல்லடம் வனம் அமைப்பின், வனாலயத்தில், அதன் நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. வனம் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார்.செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.நீதிபதிகள் புகழேந்தி, பிரஷ்னேவ்,



பல்லடம்: கடந்த காலங்களில் இழந்த இயற்கையை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என, மாவட்ட நீதிபதி அறிவுறுத்தினார்.பல்லடம் வனம் அமைப்பின், வனாலயத்தில், அதன் நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. வனம் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார்.செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.நீதிபதிகள் புகழேந்தி, பிரஷ்னேவ், கார்த்திகேயன், மற்றும் ஹரிராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி பேசியதாவது:சமீபத்தில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாடு பலரையும் உற்றுநோக்க வைத்தது. பருவநிலை மாற்றமே மாநாட்டின் தலையாய பிரச்னையாக இருந்தது. உலக நாடுகள் அனைத்தும் இதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.மரங்களை, இயற்கையை அளித்ததே இதற்கு முக்கிய காரணம். கடந்த காலங்களில், இழந்த இயற்கையை மீண்டும் திரும்பப் பெற வேண்டும். இதற்கான, பல தன்னார்வ அமைப்பினர் முயற்சி செய்வது பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், நீதிபதிகளுக்கு மரக்கன்றுகளை, வனம் அமைப்பினர் வழங்கினர். வக்கீல்கள் மார்ட்டின், ஈஸ்வரமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் மற்றும் வனம் அமைப்பின் மரங்காவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X