சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவாச்சூரில் 3வது முறையாக சுவாமி சிலைகள் உடைப்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:-சிறுவாச்சூரில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறுவாச்சூர் அருகே, பெரியசாமி மலையில், இக்கோவிலின் துணைக் கோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன.அக்டோபர் 6ம்
 சிறுவாச்சூரில் 3வது முறையாக சுவாமி சிலைகள் உடைப்பு

பெரம்பலுார்:-சிறுவாச்சூரில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

சிறுவாச்சூர் அருகே, பெரியசாமி மலையில், இக்கோவிலின் துணைக் கோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன.அக்டோபர் 6ம் தேதி, பெரியசாமி கோவிலில் 10 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை உட்பட ஒன்பது சிலைகளும், செங்கமலையார் கோவிலில் கன்னிமார்கள் சிலை, சுட்ட மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் உட்பட மொத்தம் 14 சிலைகள், மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, சென்னையைச் சேர்ந்த நாதன் என்பவரை கைது செய்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் ஜாமினில் சென்ற நிலையில், அக்டோபர் 27ல், மீண்டும் பெரியசாமி கோவிலில், ஐந்து சிலைகள் உட்பட 18 சிலைகள், மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. இதையடுத்து, கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், இரு காவலர்களும் நியமிக்கப்பட்டனர். போலீசாரும் அவ்வப்போது, ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூன்றாவது முறையாக, பெரியசாமி கோவிலில் 15 அடி உயர குதிரை சிலை, ஆத்தடி சித்தர் கோவிலில் 3 அடி உயரமுள்ள நாககன்னி சிலை உட்பட இரண்டு சிலைகள்.பெருமாள் கோவிலில் 5 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, செங்கமலையார் கோவிலில் 15 அடி உயர பொன்னுசாமி சிலை உட்பட மொத்தம் ஒன்பது சிலைகள், மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்ததால், காவலர்கள் இருவரும் பணிக்கு செல்லவில்லை எனவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படு கிறது.'மழையால், 'சிக்னல்' கிடைக்காமல் கண்காணிப்பு கேமரா செயல்பட வில்லை; அது சரியானதும், பதிவுகளை ஆய்வு செய்தால் குற்றவாளி யார் என்பது தெரிய வரும்' எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

'ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தொடர்ந்து மூன்று முறை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளும், போலீசாரும் மெத்தனமாக உள்ளனர்' என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X