அரசியல் செய்தி

தமிழ்நாடு

மழை நிவாரணம் பெற உதவி எண் அறிவிப்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
சென்னை:மழையால் பாதிக்கப்பட்டோர், நிவாரண உதவி கோரி தொடர்பு கொள்ள, தமிழக பா.ஜ., சார்பில் உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன.சென்னை உட்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால், பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.அவர்களுக்கு உணவு வழங்குதல், உதவி பொருட்கள் வழங்குதல் போன்ற நிவாரண பணிகளில் முனைப்புடன் ஈடுபடுமாறு,

சென்னை:மழையால் பாதிக்கப்பட்டோர், நிவாரண உதவி கோரி தொடர்பு கொள்ள, தமிழக பா.ஜ., சார்பில் உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

சென்னை உட்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால், பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.அவர்களுக்கு உணவு வழங்குதல், உதவி பொருட்கள் வழங்குதல் போன்ற நிவாரண பணிகளில் முனைப்புடன் ஈடுபடுமாறு, கட்சியினருக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அக்கட்சியினர் பல்வேறு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நிவாரண உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வசதியாக, 91500 21830, 91500 21831 என்ற உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. உதவி தேவைப்படுவோர், இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என, தமிழக பா.ஜ., அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X