மின் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை| Dinamalar

மின் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை

Added : நவ 09, 2021
Share
அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலுாரில், உயர்மின் கோபுரத்தின் மீதிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.தெக்கலுார் ஊராட்சி, மூணுகட்டிபாளையம் பகுதியில் உள்ள உயர் மின் கோபுரத்தில் இருந்து, நேற்று காலை, கீழே விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக, அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிரேதத்தை கைப்பற்றி,

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலுாரில், உயர்மின் கோபுரத்தின் மீதிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.தெக்கலுார் ஊராட்சி, மூணுகட்டிபாளையம் பகுதியில் உள்ள உயர் மின் கோபுரத்தில் இருந்து, நேற்று காலை, கீழே விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக, அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சட்டையின்றி விழுந்து கிடந்த அந்நபருக்கு 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அவர் யார், என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X