சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலுக்குள் பாய்ந்த பஸ் தாறுமாறு வேக டிரைவர் கைது

Added : நவ 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பஸ், வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மதியம் 12:00 மணிக்கு, ஏ.ஆர்.டி., என்ற தனியார் பஸ் அரியலுாருக்கு கிளம்பியது.பஸ் அதிவேகமாக சென்றபோது, பட்டம் அருகே டிரைவர் கலியமூர்த்தி, 32 திடீரென 'பிரேக்' போட்டுள்ளார்.மழை
 வாய்க்காலுக்குள் பாய்ந்த பஸ் தாறுமாறு வேக டிரைவர் கைது

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பஸ், வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மதியம் 12:00 மணிக்கு, ஏ.ஆர்.டி., என்ற தனியார் பஸ் அரியலுாருக்கு கிளம்பியது.பஸ் அதிவேகமாக சென்றபோது, பட்டம் அருகே டிரைவர் கலியமூர்த்தி, 32 திடீரென 'பிரேக்' போட்டுள்ளார்.மழை காரணமாக, பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்ற பஸ், சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 11 பயணியர் காயமடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்போது, அவ்வழியாக சென்ற தமிழக அரசின் தலைமை கொறாடா செழியன், போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தார். திருப்பனந்தாள் போலீசார் விசாரித்து, அதிவேகமாக பஸ்சை ஓட்டி, விபத்து ஏற்படுத்தியதாக, டிரைவர் கலியமூர்த்தியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-நவ-202100:07:03 IST Report Abuse
மலரின் மகள் அதிக வேகத்தில் குறுகலான பாதையில் நிறைய கிராமங்கள் குறுக்கிடும் பெருஞ்சாலையில் அதிக வாகனங்கள் இயக்கப்படும் செக்டரில் தமிழகத்திலேயே அதிக ரிஸ்க்கான பகுதி கோவை பொள்ளாச்சி வழித்தடம் தான். அதிக வேகமாக செல்வதுடன் சடன் பிரேக் மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை அடித்து வண்டி ஒட்டி செல்வது இத்தடத்தில் தனியார் வாகனங்கள். ஒரு அரசு பேருந்திற்கு நான்கு தனியார் வாகனங்கள் என்று இருக்கிறது வழித்தடம். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு பேருந்து வசதி உள்ளது. கோவை பொள்ளாச்சி பாசேன்ஜ்ர் ரயில் வண்டி இயக்கப்படாததால் இவர்களின் கொட்டம் அதிகம் என்கிறார்கள் அந்த பகுதியில் இருப்போர். உண்மைதான் போல. அப்பகுதி வாசகர்கள் சொன்னால் சரியாக இருக்கும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-நவ-202108:50:20 IST Report Abuse
Mani . V சரி, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் மற்றும் கிம்பளம் வாங்கிக் கொண்டு சிவனே என்று எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் இந்த RTO கள், இது போன்று மின்னல் வேகத்தில் இயக்கும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா? எது அவர்கள் மாதா, மாதம் ஒழுங்காக மாமூல் தருவதால் எப்படி எடுப்பதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X