வாய்க்காலுக்குள் பாய்ந்த பஸ் தாறுமாறு வேக டிரைவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலுக்குள் பாய்ந்த பஸ் தாறுமாறு வேக டிரைவர் கைது

Added : நவ 09, 2021 | கருத்துகள் (2)
Share
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பஸ், வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மதியம் 12:00 மணிக்கு, ஏ.ஆர்.டி., என்ற தனியார் பஸ் அரியலுாருக்கு கிளம்பியது.பஸ் அதிவேகமாக சென்றபோது, பட்டம் அருகே டிரைவர் கலியமூர்த்தி, 32 திடீரென 'பிரேக்' போட்டுள்ளார்.மழை
 வாய்க்காலுக்குள் பாய்ந்த பஸ் தாறுமாறு வேக டிரைவர் கைது

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பஸ், வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ் டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மதியம் 12:00 மணிக்கு, ஏ.ஆர்.டி., என்ற தனியார் பஸ் அரியலுாருக்கு கிளம்பியது.பஸ் அதிவேகமாக சென்றபோது, பட்டம் அருகே டிரைவர் கலியமூர்த்தி, 32 திடீரென 'பிரேக்' போட்டுள்ளார்.மழை காரணமாக, பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்ற பஸ், சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 11 பயணியர் காயமடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்போது, அவ்வழியாக சென்ற தமிழக அரசின் தலைமை கொறாடா செழியன், போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தார். திருப்பனந்தாள் போலீசார் விசாரித்து, அதிவேகமாக பஸ்சை ஓட்டி, விபத்து ஏற்படுத்தியதாக, டிரைவர் கலியமூர்த்தியை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X