பரதநாட்டிய அரங்கேற்றம் அபார நடனமாடிய ரக்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரதநாட்டிய அரங்கேற்றம் அபார நடனமாடிய ரக்

Added : நவ 09, 2021
Share
திருப்பூர்: 'வேலுண்டு வினையில்லை' என்கிற தலைப்பில், ரக்ஷனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம், மங்கலம் - 63 வேலம்பாளையத்தில் உள்ள கந்தசாமி கவுண்டர் ராஜம்மாள் மண்டபத்தில் நடந்தது.பிருத்வி இன்னர்வியர் நிறுவன உரிமையாளர் பாலன் - பூங்கொடி. இவர்களது மகள் ரக்ஷனா, சாய் கிருஷ்ணா நுண்கலை கூடத்தில், குரு சந்தியாவிடம் பரதநாட்டியம் பயின்றார்.அவரின் அரங்கேற்ற துவக்கத்தில், ஆதி தாளம்,

திருப்பூர்: 'வேலுண்டு வினையில்லை' என்கிற தலைப்பில், ரக்ஷனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம், மங்கலம் - 63 வேலம்பாளையத்தில் உள்ள கந்தசாமி கவுண்டர் ராஜம்மாள் மண்டபத்தில் நடந்தது.பிருத்வி இன்னர்வியர் நிறுவன உரிமையாளர் பாலன் - பூங்கொடி. இவர்களது மகள் ரக்ஷனா, சாய் கிருஷ்ணா நுண்கலை கூடத்தில், குரு சந்தியாவிடம் பரதநாட்டியம் பயின்றார்.அவரின் அரங்கேற்ற துவக்கத்தில், ஆதி தாளம், கமலமனோகரி ராகத்தில் புஷ்பாஞ்சலி; ரூபகதாளம், சண்முகப்பிரியா ராகத்தில் கவுத்துவம் என துவங்கும் பாடல்; ஆதி தாளத்தில், அரபி ராகத்தில் 'ஜதிஸ்வரம்' உட்பட முருகரை புகழும் பல்வேறு பாடல்களுக்கு, அழகாக அபிநயம் பிடித்து, பரதநாட்டியம் ஆடினார், ரக்ஷனா.தமிழ்நாடு வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் மற்றும் சக்தி, சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட நிறுவனர் சங்கர் ஆகியோர், ரக்ஷனாவுக்கு, பரதநாட்டிய அரங்கேற்ற சான்றிதழ் வழங்கினர் பாராட்டினர்.நிகழ்ச்சியில், ஆடிட்டர் ராமநாதன் பேசுகையில், ''கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற, பிரத்யேக அரங்கம் திருப்பூரில் இல்லாதது மிகப்பெரிய குறை. அரசு திட்டம் மூலம், கலையரங்கத்தை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.அனைத்து மாணவர்களுக்கும், நமது பாரம்பரிய கலைகளை கற்பிக்க வேண்டும்; எதிர்கால தலைமுறையினரை நெறிப்படுத்த, கலைகள் கைகொடுக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X